பாவம்
செடிப்பக்கம் போகாதே ;
ஏய் காலெல்லாம் சேறு ;
மழைத்தண்ணி பார்த்து போ ;
எனும் நீளும்
உங்கள் ஒய் யூ பிகேவ் லைக் திஸ்
பட்டியலுக்கிடையே...
நீட்டி அசைந்து
ஒரு பெட் காபி சகிதம்
வேக சமையல் அடைக்கப்பட்டு
நொடிகளை சிதறி விடாதபடி
ஓட்டம் பிடித்து மீளும்
குட்' டான பிள்ளைகளுக்கு
ஞாயிற்று கிழமை
பின் காலையில் நீங்கள்
தரும் பாச முத்ததோடு
தூக்கம் நிறுத்திக்
கட்டற்ற சில பொழுதில்
கை வீசியபடி பொடி நடையோ
வண்ணத்து பூச்சியையோ
நிலாவையோ
உங்கள் பழமை ருசிக்கும்
திடீர் விளையாட்டையோ
காண்பித்தீர்களானால்
அவர்களுக்கு போர் அடிக்கும்.
பாவம்
அவர்கள்
அதில் முதலில் நாம் !