இலவசம் இனி வேண்டாம் 555

மக்கள்...

ஊரெங்கும் கள்ளுக்கடை திறந்து வச்சி
பள்ளிக்கூடம் மூடி வச்சி...

பள்ளிக்கு சென்றோம்
புத்தக சுமையோடு...

இன்று பள்ளிக்கு செல்கிறான்
போதையோடு...

புதுபொலிவோடு அரசு மதுக்கடை
பொலிவிழந்தது அரசு பள்ளி...

கொடுத்தான் காந்தி நோட்டு
விலைபேசி விற்றோம் நம் ஒட்டு...

தனிஒருவன் வாழ்வதற்கு
சமூகத்தை கூறுபோடுகிறான்...

ஓட்டை விற்றதால் கைகட்டி
வேடிக்கை பார்க்கிறோம்...

ஒட்டைவிற்று பொறுமையாக
இருப்பதால்...

நாம் எருமை என்று பெயர்
வாங்கிவிட்டோம்...

நீட்டிய கையை மடக்குவோம்
மதயானையை அடக்குவோம்...

இனியும் ஆசைபேச்சிக்கு [இலவசம்]
செவிசாய்க்க வேண்டாம்...

பதவி வெறியும் பகட்டு பேச்சும்
காலில்போட்டு மிதிப்போம்...

இதுவரை பெருவிரலில்
வைத்த கருநீல மை...

நம் தலையெழுத்தை
எவனோ எழுதினான்...

இனியாவது நம் தலையெழுத்தை
நாம் எழுதுவோம்...

கேட்பதெல்லாம் இலவச
மருத்துவமும் கல்விமட்டும்தான்...

ஒவ்வொரு தேர்தலிலும் கிடைப்பதெல்லாம்
ஏமாற்றம் மட்டும்தான்...

ஐந்நூறுக்கு ஆசைப்பட்டு
ஐந்தாண்டை விற்கிறோம்...

ஓட்டை விற்ப்பதால் நாமும்
அரசியல்வாதிதான்...

ஓட்டை விலைக்கு விற்காமல்
நமக்கு நாமே ஆட்சி அமைப்போம்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (10-Mar-16, 7:50 pm)
பார்வை : 243

மேலே