திரண்டது தமிழ் வீரம்
திரண்டது தமிழ் வீரம்
இதுகண்டு
நிச்சயம்
இந்திய
அரசு.....மிரளும்.....!!
தடைகளை நீ
உடைத்து....உன்
தார்மீகக் கடமையை
மண்ணுக்காக
ஒருமித்து
நின்றுவிடு.....!
காளைகளோடு காலாகாலம்
வாழ்ந்த நாம்
கோழைகள் அல்ல.....
உலகம் போற்றும்
உத்தம வீரர்கள்.....!
பேசுவோம் பேசுவோம்
என்று
பேசவேண்டிய
இடம் செல்லாமல்.....
ஒலிவாங்கி தேடும்
உதவாக்கரை
அரசியல் தவளைகள்
கத்துகிறது.....கவலைதான்.....!
திரண்ட
படை.....இன்னும்
திரண்டுகொண்டே
இருக்கட்டும்.....மிரட்டும்
காவல்
மிரட்டிக்கொண்டே
இருக்கட்டும்.....நீ
கொண்ட எண்ணம்
நிறைவேறும்வரை.....!
மின் துண்டித்து
மிரட்டிய
நம்ம அரச....கும்பிடு
சாமிகள்....இனி கும்பிட்டு
வரும்போது
துண்டித்து விடுகிறோம்
வாக்குகளை.....!
கோரிக்கைகளை
வாங்கிச்
சேர்க்கிறார்கள்.....
போதிய நம்பிக்கைகள்
தராமல்.....
தடிகளை கண்டு
உன் தடைகளை
உடைக்கும் போராட்டத்தை
உடைத்து விடாதே.....
வெற்றியோடு
வீடு செல்லு
என் தோழா......!!!
மோடி அரசின்
மோசடிகளில்
சிக்கியது ரூபா
நோட்டு.....!
மோடி அரசின்
காயடிப்பில்
பின்னுக்குப் போனது
காளை....முன்னுக்கு
வந்தது
பீட்டா.....!
மோடி அரசிடம்
பதில்வேண்டி
கூடி நிற்கும்
கோடி மாணவர்களின்
உள்ளத்தில்
உள்ள..... தீ.....
எரிந்துகொண்டே
இருக்கட்டும்
அடைக்கப்படட
காளைகள்.....தடை
உடைத்து
வரும்வரை.....!!