தமிழன்டா

தமிழன் என்றாலே சிங்கமடா
தரணியில் என்றும் தலைவனடா
வணக்கம் கூறிடும் பண்புள்ளவன்டா
வஞ்சமிலா நெஞ்சம் கொண்டவன்டா !

தன்மானம் மிக்க இனமடா
சுயமரியாதை உள்ள குலமடா
இரக்கக் குணத்தில் இமயமடா
ஈகைப் பண்பில் உயர்ந்தவனடா !

தொன்மை வாய்ந்த மக்களடா
தொண்டுகள் புரிவதில் சிகரமடா
உதவிடும் உள்ளத்தில் தங்கமடா
வலிவைக் காட்டுவதில் வல்லவன்டா !

அடிமை வாழ்வை அகற்றுபவன்டா
அந்நியர் ஆதிக்கத்தை ஒழிப்பபவன்டா
நட்பைப் போற்றுவதில் கர்ணனடா
உரிமையைக் காப்பதில் புலிகளடா !

உலகமே போற்றிடும் தமிழன்டா
உள்ளத்தால் இணையும் இதயமடா !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (19-Jan-17, 6:22 pm)
பார்வை : 1600

மேலே