இயற்கை மனம் வந்து போச்சு நந்தவனம் வெந்துப் போச்சு
ஜிகுஜிக்கா ஜிகுஜிக்கா ஜிக்கா
ஜிக்கா ஜிகுஜிக்கா ஜிகுஜிக்கா ஜிக்கா
மரத்த தான் வெட்டி வெட்டி சாய்ச்சு
மனுசந்தான் வீடொன்னு கட்டி
மழையின்றி தவிக்கின்றான் பாரில்
மடச்செயலென்று அழவில்லை யாரும்
ஜிகுஜிக்கா ஜிகுஜிக்கா ஜிக்கா
ஜிக்கா ஜிகுஜிக்கா ஜிகுஜிக்கா ஜிக்கா
வீடெல்லாம் துடைப்பத்தால் கூட்டி
அள்ளினான் குப்பை - அதை
குப்பை கூடையில் கொட்டாமல்
வீதியில் வீசினான் தூக்கித் தூக்கி
வீணரின் செயலைத் தான் பாரினில் பாரு
ஜிகுஜிக்கா ஜிகுஜிக்கா ஜிக்கா
ஜிக்கா ஜிகுஜிக்கா ஜிகுஜிக்கா ஜிக்கா
மழை வேண்டி நடத்தினான் யாகம்
மக்காத குப்பைத் தான் தினம் உபயோகம்
நிலத்துள் நீரும் புகாமல் குதித்தோடி ஓடி
கலந்ததது கடலில் குப்பையாய் பாரும் !
ஜிகுஜிக்கா ஜிகுஜிக்கா ஜிக்கா
ஜிக்கா ஜிகுஜிக்கா ஜிகுஜிக்கா ஜிக்கா
கால்களும் வலுவாய் இருந்தும் கூட
பக்கத்துக்கு தெருவானாலும்
காரு பைக்கினில் பறப்பதை பாரு
மாசைப் பெருக்கிப் பெருக்கி
போட்டு விட்டான் ஓசோனில் ஓட்டை
பின் கொளுத்துது கொளுத்துது வெயிலென்று
கூப்பாடு போட்டு புலம்பி தவிப்பதை தினம் பாரு !
ஜிகுஜிக்கா ஜிகுஜிக்கா ஜிக்கா
ஜிக்கா ஜிகுஜிக்கா ஜிகுஜிக்கா ஜிக்கா
யாருக்கு யாரால் லாபம்
ஊருக்கு உதவாது மனிதம் என்றே
தப்பான கணக்காலே தப்புகள் பெருகி
தவிக்குது தவிக்குது பூலோகம்
இயற்கையை எல்லாமே அழிச்சு
லாபத்தை மட்டுமே மனசுல நினைச்சு
நஷ்டத்தில் வாழ்கையை தொலைச்சி
நரனென நர நரக்குது பாரு !
ஜிகுஜிக்கா ஜிகுஜிக்கா ஜிக்கா
ஜிக்கா ஜிகுஜிக்கா ஜிகுஜிக்கா ஜிக்கா
வாழ்க்கைக்கு தேவை பணமும் - இங்கு
பணத்துக்காகவே வாழ்கையுமாகி
பிணத்தோட பிணமா வாழுது பெத்த மனமும்
பித்து பிடித்து தவிக்குது தவிக்குது தினமும்
இது என்னக் கூத்துன்னு எண்ணிப் பார்க்குது பார்க்குது இயற்கையும் வேர்த்து !
ஜிகுஜிக்கா ஜிகுஜிக்கா ஜிக்கா
ஜிக்கா ஜிகுஜிக்கா ஜிகுஜிக்கா ஜிக்கா
மனுஷன் வாழ்ந்திட வழிசெய்த இயற்கை-இப்ப
வாழ்க்கை வாழ்ந்திட கேக்குது பிச்சை
சகல வசதியும் வந்ததெண்ணி மனம்
ததும்பி வெறுக்குது அழிக்குது இயற்கையை
ஒருகணம் யோசிக்க வேணும் யாவரும்
உனக்கு வாழ்க்கை தந்த இயற்கை
ஒருகணம் யோசித்தால் உன்னிலை
என்னவாகுமென யோசித்திட நேரமின்றி
ஓடுது ஓடுது தினம் ஆடுது பாடுது ஏனோ ?