வெயிலை வெட்டி வெட்டி சாய்த்திடு
வெயிலை வெட்டி.. வெட்டி... சாய்த்திடு...
======================================
கொளுத்தும் இந்த கோடையில்
உடல் வெந்து வெந்து சாகுது
வியர்வை வந்து உறவாடி
சோர்வை கூட்டி போகுது!!!
காலை மாலை குளியளில்லே
தண்ணி பஞ்சம் வாட்டுது
ஒரு வேளை குளியளினால் - உடல்
கற்றாழை வாடை வீசுது!!!
வாசனை திரவியந்தான்
உடலோடு உடையும் கேட்குது
தெளித்துக் கொள்ள மறந்துவிட்டால்
நாயும் எட்டி ஓடுது!!!
நா வறட்சி தொல்லை வந்து
குளிர்ந்த பானம் நாடுது
குளிர்பானம் அருந்தி அருந்தி
சட்டை பணமும் தீர்ந்து போகுது!!!
உச்சி வெயில் வேளையிலே
வெளியில் தலை காட்ட முடியலே
தவறி வெளியில் வந்துவிட்டால்
முத்துக் கொப்புளங்கள் உடலிலே!!!
கோடை வெயில்.. கொளுத்தும் வெயில்
குளிர்பானத்திற்கும் அடங்கலே
மழையும் வந்து பொழிந்துவிட்டால்
குளிராதோ பூமியோடு மனங்களே!!!
மரத்தை வெட்டி போடுவதால்
மழை மறைந்து நம்மை வாட்டுது
மரம் வளர்த்து.. மரம் வளர்த்து...
வெயிலை வெட்டி வெட்டி சாய்த்திடு!!!
வீட்டில்குழந்தை பிறப்பு என்றால்
மரக் கன்று ஒன்றை நட்டிடு
விசேட நாட்கள் அத்தனைக்கும்
மரம் நடுதல் பழக்கமாக்கிடு!!!
ஆளுக்கொரு மர வளர்ப்பினிலே
நாடு மாறும் பசுமை வனப்பிலே
வானம் மகிழ்ந்து சிரித்துவிடும்
மண்ணும் சிறக்கும் செழிப்பிலே!!!