வெண்பா - இந்தியனும் இயற்கையும்
அழகு படர்ந்த இயற்கை யிலேபலர்
உழவு நடத்தும்தே சம்இது ¬– விண்ணில்
பூக்கும் மழைத்துளி தேங்கிடக்கு ளங்களைக்
காக்கும் உயர்தே சமிது.
காட்டில் திரியும் விலங்குகள் கூடஇங்கு
வீட்டி னிலுறவாய் வாழ்ந்திடுமே – பட்டினியில்
அவைகள் துயருற்றால் தேசமகள் மார்பால்
சுவைக்க அணைத்திடு வாள்.
மழையில் வெளுக்காத பூக்கள்தோட் டத்தில்
நலமிக் கதுளசி முற்றத்தில் – ஏழை
வீட்டிலும் வாசல்ஈ கையாய்மாக் கோளமதை
பாடஒரு வன்மறந்த தில்லை.