S K MURUGAVEL - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : S K MURUGAVEL |
இடம் | : TIRUPUR |
பிறந்த தேதி | : 18-Sep-1970 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 711 |
புள்ளி | : 71 |
astrologer dyeing manager lyricist
teacher
யுத்தமானது இனமுறுவல் யுகங்கள் கடந்து
உரிமை கேட்டவன் ஊமையாகி பிணமானான்.
வரட்சி கொன்ற மண்ணுக்கு மனிதன் பசளை
நீரோடாத நதிகளில் உதிரம் அலையானது.
நான்கு வேத நூல்களில் எந்தப் பக்கத்தில்
மனிதனை மனிதன் அழிக்கச் சொல்கிறது.
நிம்மதி மறந்தது ஈழம்
அடிமை வாழ்வை துறந்தான் தோழன்.
படைவீரன் பயிற்சிப்பட்டறையில் வைக்கோல்
பொம்மைக்கு பதிலீடு மனிதவுடலானது.
இரவின் பகலின் சுழற்சி
இடறில்லாத விடியலை தேடியது.
அன்று பூத்த மங்கையின் கனவு
கற்பு சூரையாடப்பட்டு களவானது.
பெண்மை விளையாட்டு பொருளாகினால்
அவள் உடம்பு காமன்களின் திடலானது.
பால்வாடை மாறாத பிஞ்சு
ஈன்றாளின் துப்பாக்கி பதிந்த
மார்பில் வாய
*
சும்மாயிருப்பவனை
ஏன்டா, சும்மாயிருக்கே
ஏதேனும் செய்யக் கூடாதாவென்று?
உசுப்பி விடுகிறார்கள்.
அவன் எதையேனும்
செய்யத் தொடங்கினால்
ஏன்டா, உனக்கிந்த வேலை என்று
விரட்டி விடுகிறார்கள்.
அவர்களினிந்த
முரண் பேச்செல்லாம்
கேட்பதில்லை எப்பொழுதும்
உழைக்கும் தேனீக்கள்.
*
உழவு செழிக்க உலகில் இழவு
இறைவனுக்கு வந்தாக வேண்டும்
கண்ணன் சொன்னது கீதையில்
குணத்ரய விபாக யோகத்தில்
குணங்கள் மூன்று மாந்தரில்
குன்றியோ கூடியோ இருக்குமாம்
சத்வம் ரஜஸ் தமஸ் என்று
சாகச கண்ணன் சாதித்தது
சத்வ குணம் அதிலே சிறந்தது
சாத்வீகம் சத்தாக அதில் பொதிந்தது
சத்துவ குணம் முனிவர் குணம்
சமச்சீர் நோக்கும் தெளிவும் உண்டாம்
ராஜச குணம் அது ராட்சச குணம்
கோபம் தாபம் குழப்பம் உண்டாம்
தாமச குணமோ சோம்பியின் இனம்
தள்ளும் கீழே எந்நாளும்
தயக்கம் மயக்கம் அதில் இருக்கும்
தமோ குணம் அதுவே அஞ்ஞானம்
எண்ணம் முழுதும்
உந்தன் நினைவே
எண்ணி இருந்தால்
துன்பம் இல்லையே
வாழும்போது உந்தன்
நினைவில் வாழவேண்டும்
வீழும்போது உந்தன்
திருவடியில் வீழவேண்டும்
உழைக்கும் மக்கள் வியர்வை
துளியில் உன்னை கண்டேன்
உதிக்கும் முன்னர் விழிக்கும்
உலகில் உன்னை கண்டேன்,
மழலையில் மண்ணில்
மகிழ்வோடு தவழ்ந்து
சிறுவராய் சிறுசிறு
விளையாட்டுக்கள் ஆடி
குமர பருவத்தில்
கல்வியோடு குழைந்து
வாலிபத்தில் வாழ்க்கையோடு
வலியுடன் வாழ்ந்து
முதுமையில் முன்னால்
நின்று வாழ்த்தி
போகும்போது பிறர்
கண்ணில் நீர் வந்தால்
நீ வாழ்ந்தாய்.......
நகை வந்தால் நீ வாழ்ந்தும் இறந்தாய்...
இதில் காதல் என்ற களை
எப்படி முளைத்ததோ........
நீல வான மங்கை
கன்னம் கதிரவனை
காணாது சிவந்ததோ...
கருத்த வானமொரு
பருத்திக்காடு..
மின்னுகின்ற விண்மீனும்
அதில் பஞ்சுக்கூடு...
துள்ளியோடும் மேகமும்
பஞ்சாய் பறக்குதே....
வானமங்கை வெண்ணிலவும்
ஓடி ஓடி சேர்க்குதே......
அழகான
ஆகாயத்தில்
இரு மனங்கொண்ட
ஈர முகில்கள்
உரசுவதால்
ஊரே அலறுமாறு
எழுந்த ஒலிக்குமுன்னர்
ஏட்டிக்கு போட்டியாய்
ஐம்பூதங்களும்
ஒடுங்கிட பிறந்த
ஓர் ஒளி குழந்தை......
வாடிய முகத்தோடு
நாடி வந்தவர்க்கு
தேடிய செல்வம்
கோடி இருந்தும்
ஓடி விடு என்பதே..
நம் நாடும் நாளை வல்லரசே
இனி யொரு விதி செய்வோம்
தனி ஒரு பெண்ணுக்கு
பாதுகாப்பு இல்லைஎனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
வோட்டுக்கு பணம் வாங்கும்
கீழ் நிலையை மாற்றி
நாட்டுக்கு நல்லதை
செய்யும் நல்லவரை
தேர்ந்தெடுக்கும்
மேல் நிலையை
உருவாக்குவோம்
கல்விக்கு கடன் வாங்கும்
பொல்லாத வாழ்வை
பொடிபொடி
ஆக்குவோம்
எல்லோர்க்கும் வேலை
என்பதை எழுத்து உரிமை
ஆக்குவோம்
இலவசம் தவிர்த்து
இன்னல் தீர்க்கும்
இனிமையான வேலை
கேட்போம்
நதிகளை இணைப்போம்
மதிகளை இணைப்போம்
சதிகளை அறுப்போம்
நாட்டை காப்போம்
மொழிகளில் நாம்
வழி மாறினாலும்
விழிகளில்
என்றும் இந்தியரே
நாளைய உலகில்
நாமும் வல