குணம்

கண்ணன் சொன்னது கீதையில்
குணத்ரய விபாக யோகத்தில்
குணங்கள் மூன்று மாந்தரில்
குன்றியோ கூடியோ இருக்குமாம்

சத்வம் ரஜஸ் தமஸ் என்று
சாகச கண்ணன் சாதித்தது
சத்வ குணம் அதிலே சிறந்தது
சாத்வீகம் சத்தாக அதில் பொதிந்தது

சத்துவ குணம் முனிவர் குணம்
சமச்சீர் நோக்கும் தெளிவும் உண்டாம்
ராஜச குணம் அது ராட்சச குணம்
கோபம் தாபம் குழப்பம் உண்டாம்

தாமச குணமோ சோம்பியின் இனம்
தள்ளும் கீழே எந்நாளும்
தயக்கம் மயக்கம் அதில் இருக்கும்
தமோ குணம் அதுவே அஞ்ஞானம்

எழுதியவர் : முரளி (11-Apr-15, 11:48 am)
Tanglish : kunam
பார்வை : 175

மேலே