நம் கடமை
மழலையில் மண்ணில்
மகிழ்வோடு தவழ்ந்து
சிறுவராய் சிறுசிறு
விளையாட்டுக்கள் ஆடி
குமர பருவத்தில்
கல்வியோடு குழைந்து
வாலிபத்தில் வாழ்க்கையோடு
வலியுடன் வாழ்ந்து
முதுமையில் முன்னால்
நின்று வாழ்த்தி
போகும்போது பிறர்
கண்ணில் நீர் வந்தால்
நீ வாழ்ந்தாய்.......
நகை வந்தால் நீ வாழ்ந்தும் இறந்தாய்...
இதில் காதல் என்ற களை
எப்படி முளைத்ததோ........