முரண் கவிதை

*
சும்மாயிருப்பவனை
ஏன்டா, சும்மாயிருக்கே
ஏதேனும் செய்யக் கூடாதாவென்று?
உசுப்பி விடுகிறார்கள்.
அவன் எதையேனும்
செய்யத் தொடங்கினால்
ஏன்டா, உனக்கிந்த வேலை என்று
விரட்டி விடுகிறார்கள்.
அவர்களினிந்த
முரண் பேச்செல்லாம்
கேட்பதில்லை எப்பொழுதும்
உழைக்கும் தேனீக்கள்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (11-Apr-15, 10:25 am)
பார்வை : 355

மேலே