சபதம்

பாடசாலை படிகள்
பணக்கட்டாய்
கல்வியை பாதாளத்தில்
கெடவிட்டாய்

சுமையேரும் இடர்தாங்கும்
ஏழ்மையின் சீமானுக்கு
கொடுத்த ஏணி
கிடைமட்ட மூங்கில்களைப்
பிடுங்கி லதில்
தைத்தானே
செங்குத்து முட்பலகைகளை

ஏழையின் நிலையென்ன
மிதிபடும் மயிரா ?
வலிதான் இதன் வழியா
இல்லை வளியோடு
எங்கள் உயிரா ?

செவ்வக தாளால் பாகுபா
தெனில் அழியட்டு மிந்த
பார் சுக்கு நூறாய் போகட்டும்

உரிமைக் குரிமைக் கொடுக்கா
மானிட ஈ(இ)னம்
உதிரமற்று உதிர
புலன்க லெல்லாம் சிதற
சாக வேண்டும் பதற
தர்மம் மட்டும் தொடர

இது சாபமில்லை
சபதம் !!!!

எழுதியவர் : கீதங்களின் வானவிநோதன் (11-Apr-15, 10:23 am)
பார்வை : 188

மேலே