ஒரு தீக்குச்சியில் உனது வாழ்க்கை

மனிதம் !
உலகத்தின் உயர்ந்தசொல்!
உயிர்களின் சிகரம் !
புனிதமான பொக்கிஷம்
ஆனால் இன்று....

உன் காமப் பார்வையிலே
கண்ணகி கூட
கர்ப்பம் தறிக்கிறாள்

பணத்தின் பார்வையிலே
அடக்கமானவள் கூட
ஆடை உரிக்கிறாள்

ஆசைப்பட்ட இடத்தில்
ஆசிரமம் அமைத்துக் கொண்டாய்

அங்கே
ஆபாச படங்கள் எடுத்து
ஆஸ்காருக்கு அனுப்பிவிட்டாய்

அத்துமீறல் விளையாட்டையே
தேசிய விளையாட்டாய்
மாற்றிவிட்டாய்

விபச்சார விடுதியில் மட்டுமே
ஒற்றுமையான தேசத்திற்கு
ஒத்திகை பார்க்கிறாய்

மானுடத்தைத் திருத்த
பூமித்தாய் புறப்பட்டாள்
ஆனால்
பூமித்தாய்க்குப் பிரசவவலியென்று
அணுகுண்டு போட்டு
அறுவை சிகிச்சை
செய்து விட்டாய்

நீ மட்டுமே புத்திசாலியென
நினைத்துக் கொள்கிறாய்
ஆனால் உன்னைவிட
உன்னைச் சுற்றியுள்ளவையே
புத்திசாலியாக இருக்கின்றன
அதனால்தான்
உனக்குமுன் உன்வீட்டு நாய் கூட
வாலாட்டுகிறது

உனக்குப் பகையாய்த்
தெரிந்ததை எல்லாம்
பல தீக்குச்சிகளில்
புகையாக மாற்றிவிட்டாய்
ஆனால்
உன்னை எரிப்பதற்கு
ஒரு தீக்குச்சி
போதும் என்பதை
மறந்துவிட்டாய் !

எழுதியவர் : ஜின்னா (10-Nov-14, 2:15 am)
பார்வை : 442

மேலே