நமது எழுத்து.காம் எவ்வாறு பிரபலமடைந்துள்ளது , எப்படி பார்வையாளர்கள்...
நமது எழுத்து.காம் எவ்வாறு பிரபலமடைந்துள்ளது , எப்படி பார்வையாளர்கள் வருகிறார்கள் என்ற ஒரு தகவல் எனக்கு கிடைத்துள்ளது.
1) இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோரில் 81.5 % சதவீதம் பேர் எழுத்து.காம் என்ற இந்த இணையதளத்தை பார்த்துள்ளனர்.
2) இந்திய அளவில் அதிகம் பார்க்கப்படும் இணையதளங்களின் பட்டியலில் எழுத்து.காம் 20,126 வது இடத்தை பெற்றுள்ளது. (தமிழக அளவில் இதை கணிக்கிட முடியாது.)
உலக அளவில் 1, 71, 600 வது இடத்தை பெற்றுள்ளது.
**** தமிழ் மொழிக்கான இலக்கிய தளம் என்ற நோக்கில் இந்த இடங்களை பெற்றது மிகப்பெரிய சாதனை.
3) கூகுள் தேடலின் மூலம் எழுத்து.காம் பற்றி அறிந்தவர்கள்
20 % பேர்கள் -- முகநூல் வாயிலாக அறிந்தவர்கள் 3.8 % பேர்கள்.
4) ஆண்களை விட பெண்களே எழுத்து.காம் இணையதளத்தை அதிகம் பார்த்துள்ளனர்.
5) எழுத்து.காம் இணையதளத்தை வீட்டிலிருந்து பார்ப்போரை விட வேலை பார்க்கும் அலுவலகத்திலிருந்து பார்ப்போரே அதிகம்.
**இதில் குறிப்பிடும் சதவீதங்கள் அனைத்தும் இண்டர்நெட் பயன்படுத்துவோரின் அவரவர் சுய விவரங்களின் (Internet User 's Data ) அடிப்படையில் தரப்பட்டுள்ளது.
தகவலுக்கான ஆதாரம் உலக இணையதளங்களின் பயன்பாட்டை துல்லியமாக கணிக்கும் ஓர் இணையதளத்திலிருந்து பெற்றேன். (alexa )
தமிழனாக , ஓர் எழுத்தாளனாக இந்த எழுத்து.காம் என்ற இணையதளத்தில் உறுப்பினராக இருப்பதில் பெருமை கொள்வோம்.
இந்த தளம் மேலும் மேலும் வளர வேண்டும். தமிழ் மொழிக்கான தரமான இலக்கிய இணையதளம் என்ற புகழ் பெற வேண்டும் .
எழுத்து. காம் நிர்வாகத்திற்கும், எழுத்து குழும தோழர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
---இரா.சந்தோஷ் குமார்.