சில்கள்

மனதை அடக்கும்
குணத்தைக் கொண்ட
மனிதனை இன்னும் ஏன்
படைக்கவில்லை பிரம்மன் ?
*
போகின்ற வாழ்வை
இழுத்துக் கட்ட
கயிறின்று திரிப்போம்
கவிதையிலே !
*
காகிதப் பூக்களில்
மையின் தேனை
உறிஞ்சிச் செய்ததுதான்
கவிதைப் பண்டம் !
*
பாவத்தின் பலனை
சாவதற்கு முன்பே
சொல்லிடும் தூதன்
தானே முதுமை !
*
உழைத்து உழைத்து
ஓடாய்த் தேய்ந்தது
குழந்தையின் காலடிச் செருப்பு !

விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (8-Mar-14, 12:49 pm)
பார்வை : 106

மேலே