சில்கள்

தொட்டிகள் தோறும்
கொட்டினால் கூட
தீராதது மனக் குப்பை !
*
போனதெல்லாம் திரும்ப
வரக் கண்டேன்
எனது
நகமும் முடியும் !
*
அழைத்தும் வராமல்
சிலையாய் நின்ற கடவுள்
அழைக்காமலேயே
வருகிறார் தினம் தினம்
கனவில் குழந்தைக்கு !
*
நெஞ்சம் கருகருக்க
தலை வேறு கிறுகிறுக்க
வியர்வைக் கடலில்
வரைந்திட்டேன் ஒரு
இரங்கல் கவிதை !
*
ஆகின்றான் மனிதனும்
கடவுளாக
போகின்ற காலத்தை
வெல்லும் பொழுது !

விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (8-Mar-14, 12:40 pm)
பார்வை : 103

மேலே