நெற்றித்திலகமிடு

நான்
எழுதிக்கொண்டிருக்கும்
ஒவ்வொரு
வார்த்தையிலும்
என் உயிர்
புதைந்திருக்கின்றது
உன் உரு நிறைந்திருக்கின்றது..
உன் பார்வைத் தீண்டலுக்காய்
படர்ந்திருக்கும் மணல் சிற்பமென
மடிந்துகிடக்கின்றதென் காதல் கவி..
காற்றும் கடுமழையும்
சிருபாதங்களும் கால அலைகளும்
கலைத்துக்கொண்டிருக்கின்றன
அச்சிறு கவியை...
என்னுயிரும் உன் உருவும்
பெரும் மணல் பரப்பினில்
காத்துக்கிடப்பதனை
உன் மனக்கண்கள்
கானலாகவாவது கண்டிருக்குமெனில்
நெஞ்சம் நிறையும்வரை
உயிர்க்காற்றிழுத்து
கொஞ்சம் அதில் என் உரு வடித்து
சிறு கண்ணீர்த்துளி
ஒன்றினில்
வெளியெடுத்து
நெற்றித்திலகமிடு...
என் கவிதை
நிம்மதிப் பெருமூச்சிடட்டும்!

எழுதியவர் : வெ. கண்ணன் (2-Mar-16, 10:58 pm)
சேர்த்தது : வெ கண்ணன்
பார்வை : 69

மேலே