மாயக்காரன் நீ
அனுமதி பெறாமலே உன்னை
அழகாக அரங்கேற்றம்
செய்துவிட்டாய் என்னில்...!
உன் கண்களால் காதலை
எந்த வித துரிகைகளும்
இல்லாமல் தீட்டி விட்டாய் என்னில்...!
கையில் உழி ஏதும் இல்லாமல்
உன்னை அப்படியே தத்ருபமாக
செதுக்கி விட்டாய் என்னில்...!
போதை ஏதும் இல்லாமலே
அழகான கிறக்கத்தை
கொடுத்து விட்டாய் என்னில்...!
நேரம் காலம் தெரியாமல்
கவிதை கிறுக்கும் பழக்கத்தை
ஏற்படுத்தி விட்டாய் என்னில்...!
அத்தனையும் ரசித்து ரசித்து
சாகடிக்கின்ற உணர்வை
புகுத்தி விட்டாய் என்னில்...!
சிணுங்கி சிணுங்கியே சிதறடிக்கும்
குழந்தை போலவே
மாற்றி விட்டாய் என்னை....!
எந்நேரமும் புலம்பி கொண்டிருக்கும்
பைத்தியமாகவே
மாற்றி விட்டாய் என்னை...!
காலம் முழுக்க வெளி வர விடாமல்
உன்னிலே ஊற
வைத்து விட்டாய் என்னை ...!
ம்ம்ம்ம்ம்.... இந்த உலகின் ஒட்டு மொத்தமும்
நீ... நீ... நீ...
ஆம்
நீ.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
