விழிகளில் காதல்

அன்பு ஈர்க்கும்,
அங்கே மௌனம் பயிர்க்கும்.
மனசெல்லாம் வேர்க்கும்,
மென்மை வெளிப்படும் ஆக்ஷ்சிஜனாய், எனினும்
உடலுக்குள் உஷ்ணம் வந்து உறையும்.

வெம்மையில் கண்கள் பணிக்கும்,
வெளிவரத்துடிக்கும் வார்த்தைகளில்
வேகத்தடை பின்னலிடும்.

என்ன எது என அளவெடுத்து உயிர் துடிக்கும்;
நட்பா, காதலா என தரம் பிரிக்கும்?

கண்ணில் பார்வை கோலமிடும்;
வந்து விடு என விழி வாசல் வர்ண ஜாலமிடும்;
உள்ளம் ஆமையாய் அடி எடுத்து வைத்தால்
சுற்றுச்சூழல் கைகாட்டி தடுத்து விடும்..

ச்சோ.. எப்படித்தான் நான்..
எப்பொழுது தான் என் காதல்...
விடியும், அல்லது வடியும்?
வெடிக்கும் அல்லது சிதறும்?

ஆசை அசை போட
காதல் பருவப்படிப்பில்
தேறுவேனோ? தெளிவேனோ?

கடைக்கண் சிமிட்டி கொஞ்சம்
கனியிதழில் முருவலியேன்,
காதல் எனக்கு எட்டட்டும்
காலம் இஷ்டத்துக்கு கொட்டட்டும்.
வெம்மை வெந்து தணிய - அன்றேல்
வேறெங்கு நான் போக,
உன்னை விட்டு?

எழுதியவர் : செல்வமணி (2-Mar-16, 10:08 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : vizhikalil kaadhal
பார்வை : 148

மேலே