அத்தனையும் அற்றுப்போ

அத்தனையும் மறந்துபோ
அவனது ஆட்டம் நீ அறிவாய்
அத்தனையும் மறந்துபோ
அவனது ஆளுமை நீ உணர்வாய்

எத்தனைச் சிறியவன்
அவன் எத்தனை எத்தனை பெரியவன்
கற்றுணர முடியாது
அத்தனையும் மறந்து போ
உள் உற்றுணர்ந்து அறிவாய் நீ

எத்தனை என வியக்காதே
எது எப்பொருள் என குழம்பாதே
அத்தனையும் ஒன்றேதான்
அற்பத்தின் அற்பம் அது

இங்கு வெற்றிடம் ஏதுமில்லை
நீ ஒளிந்துகொள்ள வழியில்லை
அத்தனையும் மறந்து போ
அறிவாய் நீ அப்பொருளை

உயிர் நிலை ஆட்டம் கொள்ளும்
இருள் பயம் இறுக்கித் தள்ளும்
அத்தனையும் கடந்துபோ
அதுவழி நடத்திச்செல்லும்

மெய்ப்பொருள் அதுமிதக்கும்
மேன்மைகுனம் நீ உணர்வாய்
அத்தனையும் அற்றுப்போ
அந்த ஆதிநிலை நீ காண்பாய்!

எழுதியவர் : வெ. கண்ணன் (27-Apr-16, 8:41 am)
பார்வை : 94

மேலே