காலச் சருகுகள்
![](https://eluthu.com/images/loading.gif)
படித்து முடிக்கப்பட்ட
கால பக்கங்கள்
வழிச் சாலையின்
இருபுறங்களிலும்
சருகுகளாய்
படர்ந்து கிடக்கின்றன
சிலகணம் நின்று
அதன் அருகே சென்று
ஓர் இலைச்சருகெடுத்து
அது வளர்ந்த
கால மரத்தின்
சிறு கிளைதன்னில்
பதியவைத்து
அன்று
வெளியெங்கிலும்
நிறைந்திருந்த
அத்தென்றல் காற்றினை
அதே உயிரோட்டத்துடன்
மணம் நிறைத்து வீசிடுமாறு
விழைக்கின்றது இச்சிறுமனம்
இங்கே
அசையக்கிடப்பது
பசுந்தளிறல்ல
உயிரற்ற உலர்ந்த
சருகென்பதை நம்பமறுத்து!