உழைப்பாளி போட்டி கவிதை

உனக்காக எனக்காக உழைப்பவன்
உழைப்பாளி அல்ல
ஊருக்கும் உலகுக்கும்
உதிரத்தை வியர்வையாக சிந்தி
உழைப்பவனே உழைப்பாளி

உற்றம் சுற்றம் உலகம் வாழ
உழைப்பே மூலதனம் என்ற
உன்னத மனப்பான்மை பக்குவம்
உழைப்பவனின் நெஞ்சத்தில்
ஊற்றெடுத்துப் பாயும் ,

உயிர்கள் வாழ தன் உழைப்பை
உரிமையுடன் பெருமையுடன்
உவந்தளிக்கும் உழைப்பாளி
உண்மையில் உயர் குலத்தோன்,
உழைப்பவன் இல்லாத உலகும் உண்டோ /

உழைக்கும் உன் பாதங்கள் அணியவில்லையே
உயர ரக பாதணிகள்
உந்தன் நிழல் கூட உச்சி வெயிலில்
உழைக்கும் உன் நோக்கம் பார்த்து
உனக்காக ஏங்கியே தவித்திடும்

உறங்காத கண்களும் உழைப்பின்
உளைச்சலினால் உறங்கி விடும்
உழைப்பு உழைப்பு உழைப்பு
ஊக்கம் உயர்வு தரும்
உணர்வு ஊட்டம் தரும்

உழைப்பு உழைப்பாளியின் குறிக்கோள் ,
உலகம் உழைப்பாளியின் கைக்குள்
உறுதி கொண்ட உள்ளமே
உழைப்பாளியின் சொத்து
உழைப்பால் உயர்ந்தவன் இளைப்பதில்லை
உயர்ந்த எண்ணம் என்றும் சளைத்ததில்லை

உலகில் உயர்ந்தவன் உழைப்பாளியே
உழைப்பாளிக்கு நிகர் எவரும் இல்லை
உலகில் வாழும் உயிர்கள் யாவும்
உழைப்பின் பயனை எதிர்நோக்கியே ,
உழைப்பும் பிழைப்பும் என்றும் ஓங்கும்
உழைப்பவன் கைகளால்

வாழ்க உழைப்பாளி வளர்க உலகம்
வாழ்த்துவோம் வரலாறில் உழைப்பாளியை

எழுதியவர் : பாத்திமாமலர் (27-Apr-16, 9:53 am)
பார்வை : 1112

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே