உழவு

                   உழவு

இந்தியாவின் முதுகெலும்பு நீ! 
ஏறும் கலப்பையும் 
உயிர் மூச்சு ...

உழவு நண்பனே!
களமிறங்கி தலைகவிழ்த்து
தாய்மண்ணை சீராட்டி
சீராக்கி ஏர் பிடித்து ..

நாற்றுப் பதித்து நாவசைத்து
ராகத்தோடு நாட்டுப்பாடலில்
களை எடுத்து களைப்பின்றி
நீர் பாய்ச்சி உரமிட்டு 
வெய்யிலோடு உறவாடி

பனி மழை போர்த்தி
முதுகு வளைந்து 
குனிந்து நிமிர்ந்து 
நெற்றி வழித்து

பசித்தவயிறோடு
சேரும் சேற்றோடு
கலயத்துக் கஞ்சியோடு

ருசியறிந்து மறந்து
போகும் வயிறோடு
உழவுப் பசியும்...

உயிர் உள்ள வரை
வாழ்வு 
உடல் விட்டும்
முடியும் வரை 
உழவே..

கோவணம் கட்டிக்கொண்டு 
களத்தில் இறங்குபவன் 
மனமோ!மானமோ!
உயிரைக் கையிலும்
வாங்கிய கடனை வயிற்றிலும்..

சிரம் தாழ்த்தி மானத்தோடு
வாழ்வும் வயலும்
மக்கள் பசிபோக்க...

இதை விட வேறு 
எதுவோ? 

பூமியைக் குளிர 
வைக்கும் வித்தை 
உனக்கு மட்டும்தான் 
தெரியும்....

செழிக்க வைப்பதும் 
உயிர் கொடுப்பதும் 
நீயே...

உழவு ஓங்கட்டும் 
உயரட்டும் நம் வாழ்வோடு
தினந்தோறும் மக்கள் 
பசி போக்க..... !

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (27-Apr-16, 11:02 am)
Tanglish : uzhavu
பார்வை : 444

மேலே