அரசாங்கம்
வரி பிடுங்கி
கணக்கெடுத்து
தனக்கென்பதை
வைத்துக்கொண்டு
சில நோட்டுகளை
மூட்டை கட்டி
பாத்திரம் பார்த்து
தூக்கி எரிந்து
காசுகளை
எண்ணித் தயங்கி
கூட்டத்தினுள்
வாரி இறைத்து
யாசகம் கிடைத்தது
இத்தனைதான்
என்று அள்ளிக்கொடுத்தவர்
வாயில் இலவச அரிசி இட்டு
மாறி மாறி மாற்றமின்றி
அரசியல் செய்யும் அரசாங்கம்!