கொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் - பகுதி 28

மெதுவாய் நகர்ந்து வந்த சுறா இறுதியில் சுஜியை 'அந்த' நிமலனுக்கு எதிரே கொண்டு வந்து சேர்த்து; இப்போது இருவரையும் சேர்த்து தள்ளிக் கொண்டு சென்றது.

அந்த கடுங்குளிரான தண்ணீரிலும் சுஜியின் அருகே, மிக அருகே இருக்கையில் 'அந்த' நிமலனுக்கும் தேகம் சூடேறியது. இதயத்தின் துடிப்பு துல்லிதமாய் கேட்க்கும் அமைதியான ஆழ் கடலில்.

தலை ஒரு ஓரமாய் சாய்ந்திருக்க தண்ணீரில் நாலா பக்கமும் சுழன்று முட்டி மோதி அங்கே கொஞ்சம் இங்க கொஞ்சமாய் சுஜியின் முகத்தை மறைந்துக் காட்டியது குளிர்ந்த கடல் நீர்.

சுஜியின் மயக்கத்தை தெளிய வைக்க அவளின் முகத்தை அவனின் இரு கைகளால் பற்றினான் அவன். அலறியது அவனின் கை கடிகாரம், அந்த நிசப்தமான அமைதியில்.

கண்ணோரம் காதல் வந்தால்
கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால்
எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும்

அலறிய கைக்கடிகாரத்தின் சத்தத்தை பட்டென அடைத்தான் 'அந்த' நிமலன். திடீரென கேட்ட சத்தத்தால் திமிங்கல சுறா நிலை தடுமாறவில்லை காரணம் அங்கே அதிர்வுக்கான அவசியங்கள் இல்லை. இருந்த போதும், 'அந்த' நிமலன் தட்டு தடுமாறி அவனின் கைக்கடிகாரத்தை அடைத்தான். மற்ற சுறாவோ அல்லது ஆபத்தான கடல் வாழ் ஏதாவது வந்து தாக்கிடுமோ என்று பயந்து.

அதீத மயக்கம் அவளுக்கு நெஞ்சடைப்பை தந்து மரணிக்க செய்யும் என்பதனை நன்கு அறிந்திருந்தான் 'அந்த' நிமலன். கடலும் அதன் ஆழமும் இவனுக்கு புதிதில்லை. காரணம் இவனுக்கு Scuba Diving தெரியும்.

நிறைய ஊர்களுக்கு சென்று அங்கிருக்கும் கடலில் டைவிங் செய்வது, அங்கிருக்கும் கடல் வாழ் ஆராச்சியாளர்கள், விஞ்ஞானிகளுடன் நல்ல நட்பை ஏற்படுத்தி கொண்டு மன அமைதியை தேடி அலைபவன் இவன்.

நொடிக்கு நூறு கோடியில் புரளும் இவன் கடல் சம்மந்தப்பட்ட பல காரியங்களுக்கு நிதிகளை அள்ளி கொடுத்திருக்கின்றான். குறிப்பாக அரியவகை உயிரினங்களாக குறைந்து வரும் சுறா, திமிங்கிலம், கடலாமை, கடற்குதிரை, டால்பின் போன்ற பல உயிரினங்களின் பாதுகாப்பு திட்டத்திற்கு பல வகைகளில் உதவியம் செய்துள்ளான்.

'அந்த' நிமலன் சுஜியுடன் சேர்த்து ஆழ் கடலுக்குள் வந்து ஏறக்குறைய இருபது நிமிடங்கள் ஆகிறது. குறைந்த பட்ச்சம் இன்னும் இருபது நிமிடங்கள் மட்டுமே அவனாலும் தாக்கு பிடிக்க இயலும். இல்லையேல், சுஜியோடு சேர்ந்து இவனும் பரலோகம் போய் சேர வேண்டியது தான்.

சுஜியை நெருங்கி அவளை கட்டியணைத்து அப்படியே அவளை திமிங்கல சுறாவின் பக்கத்திலிருந்து எதிர் பக்கத்திற்கு கொண்டு வந்தான். இப்போது திமிங்கல சுறா சுஜியை தள்ளாமல் 'அந்த' நிமலனை தள்ளியது. அவளை கைகளில் ஏந்தியவன், அவனின் இடக் காலை முட்டி வரை தூக்கி அவளை வசதியாக சாய்த்துக் கொண்டான்.

தண்ணீரின் வேகமும் மிதமாக இருந்ததினால் சுஜி அவன் கையிலிருந்து நழுவி விட அதிக வாய்ப்பில்லை. அவனிற்கு வசதியாக சுஜியின் கழுத்தை வல கையினால் சுற்றினான். இரு கைகளையும் கொண்டு அவளின் நெஞ்சை அமுக்கினான் தொடர்ச்சியாக.

அவளின் தலையை கைகளில் ஏந்தி அவளின் வாயில் இவன் வாய் வைத்து அவளுக்கு மூச்சளித்தான். நான்கைந்து தடவை செய்தும் சுஜி அசைவற்று கிடந்தாள். 'அந்த' நிமலனுக்கு கடலிலும் கண் கலங்கியது. உலுக்கினான் அவளை பலம் கொண்டு பதற்றத்தோடு.

தொடரும்....

எழுதியவர் : தீப்சந்தினி (11-Nov-19, 7:39 am)
சேர்த்தது : நிர்மலன்
பார்வை : 211

மேலே