செய்தி தொடர்பாளர்களுக்கு அறிவுரை
அன்புள்ள நமது பேரியக்கத்தின் செய்தித் தொடர்பாளர்களே.
உங்களது பரப்புரை, இயக்கத்தின் கொள்கை விளக்கம் மற்றும் விவாத மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது பேசவேண்டியது பற்றி எனது கருத்தை கொள்கை பரப்புச செயலாளர் என்ற முறையில் தெரிவிக்க ஆசைப்படுகிறேன்.
ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில் அவரது ஆலோசகராக இருந்த கோயல்பல்ஸ்சே நமக்கு வழிகாட்டி.
ஒரு பொய்யை ஆயிரம் முறை சொன்னால் அது உண்மையாகிவிடும். அதைத்தான் நம் முன்னேடித் தலைவர்களின் வழிநடத்துதல்படி செய்து வருககிறோம்.
விவாதத்தில் கலந்து கொள்ளும்போது சத்தம் போட்டு பேசி நம் இயக்கத்துக்கு எதிரான கருத்துக்களை கூறுபவர்களைப் பேசவிடாமல் இடையூறு செய்யும் வகையில் பேசிகொண்டே இருக்கவேண்டும்.
ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பிரச்சனைக்குரிய பொய்யான அபாண்டமான கருத்துக்களை தெரிவிக்கவேண்டும்.
மூடப்பழக்க வழக்கங்களை அறிவியல் பூர்வமானவை என்று வாதாட வேண்டும். அதற்கு வேண்டிய பொய்யான ஆதாரங்களை என் தலைமையில் இயங்கும் மென்பொருள் வல்லுநர்கள் தயாரித்து கொடுப்பார்கள். அவற்றை ஆதாரமாகக் காட்டவேண்டும்.
நமக்கு எதிராகப் பேசுபவர்கள் எதைச் சொன்னாலும் "ஆதாரம் இருக்கா? ஆவணம் இருக்கா? சான்று இருக்கா"ன்னு கேட்டா அவுங்கள திணறடிக்க வேண்டும்.
சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டும்.
மற்றவர்கள் யாரும் அவர்கள் கருத்தை முழுமையாக சொல்லவிடக்கூடாது. நேரம் ஆனதும் நெறியாளர் விவாதத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகூறி நிகழ்ச்சியை முடித்துக் கொள்வார்.
உங்கள் அனைவருக்கும் நன்றி. பக்கத்து அறையில் சூடான பிரியாணி, வறுவல், ,சுக்கா போன்ற பல உண்வு வகைகள் உங்களுக்காகத் தயார் நிலையில் உள்ளது. சாப்பிட்டபிறகு எனது செயலரிடமிருந்து மறவாமல் காசோலைகளை பெற்றுக்கொள்ளுங்கள். நன்றி. வணக்கம்.