வாழ்க்கையின் இரகசியம்

ஒரு நாள் சிறுவன் ஒருவன் தன் அம்மாவிடம், வாழ்க்கையின் இரகசியம் என்னவென்று வினவினான்.

அதற்க்கு அந்த அம்மா, மகிழ்ச்சியாக இருப்பதுதான் வாழ்க்கையின் இரகசியம் என்று பதிலளித்தாள்.

மறுநாள் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் நீங்கள் வாழ்க்கையில் என்னவாக ஆக விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை ஒவ்வொரு மாணவனிடமும் கேட்டு கொண்டே வந்தார்.

ஒவ்வொருவரும், நான் மருத்துவர், நான் பொறியாளர் என்று ஆவலாய் பதில் அளித்தனர்.

ஆனால் ஒரு சிறுவன் மட்டும் நான் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன் என்று பதில் அளித்தான்.

அனைவரும் சிரித்து விட்டனர், ஆசிரியர் அந்த சிறுவனை பார்த்து நான் கேட்ட கேள்வி உனக்கு புரியவில்லை என்றார், அதற்க்கு அந்த சிறுவனோ உங்களுக்கு தான் வாழ்க்கையின் இரகசியம் புரியவில்லை என்று பதிலளித்தான்.

எழுதியவர் : முஹம்மது உதுமான் (7-Nov-19, 4:33 pm)
சேர்த்தது : முஹம்மது உதுமான்
பார்வை : 297

மேலே