உன் காதல் இல்லை என்றால்

ஒரு நாள் அவனும் அவளும் சாலையோர பூங்காவில் நடந்துகொண்டு இருந்தனர், அவர்களுக்கிடையில் சற்று இடைவெளி அதிகமாய் இருந்தது. அங்கு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை, மௌனம் அவர்களை ஆட்சி செய்தது.
காரணம், கடந்த நாள் இரவு அவர்கள் சண்டையிட்டது தான்.

இருவரும் பிரிந்துவிடலாம் என்று முடிவு எடுத்துவிட்டனர், அவர்களின் காதல் முடிவுக்கு வந்துவிட்டது என்று சற்று முன்னர் தான் அவனுக்கு தெரியவந்தது.

கடந்த நாள் இரவு இவர்களுக்கிடையில் தொடங்கிய சிறு வாக்குவாதம் பூகம்பமாக வெடித்தது.
அவளோ, பணக்கார வீட்டு பெண். அவனோ நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். அன்று இரவு நடந்தது இதுதான், அவள் அவனிடம் என்னை எப்படி வைத்து காப்பாற்றுவாய் என்று வினவினாள். அவனும் காதல் மொழியில் என்னவெல்லாமோ சொல்லி பார்த்தான் எதற்கும் அவள் சமாதானம் ஆகவில்லை, நேரில் பேசி கொள்ளலாம் என்று அவன் இணைப்பை துண்டித்துவிட்டான், அவள் அவனை தன் மனதில் இருந்து துண்டித்துவிட்டால் என்பதை அறியாமல்.

கைகோர்த்து நடக்கும் இருவரும் இன்று கைகட்டி நடக்கின்றார்கள்,
அவன் கையில் அவளுக்காக பரிசு பொருள் அதில் அவளுக்காக ஒரு கடிதம். ஆனால் அவள் கைகளிலோ இவன் அவளுக்கு முன்னதாக பரிசளித்த பரிசு பொருட்களும், கடிதங்களும், வாழ்த்து அட்டைகளும் இருந்தன.

திடீரென ஒரு சப்தம், அருகினில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த பளுதூக்கும் இயந்திரத்தின் ஒரு பகுதி அறுந்து நேராக அவன் மார்பில் குத்தி அவன் இருதய இரத்தத்தில் குளித்துக்கொண்டிருந்தது, அவனது உயிரோ அவளை பார்த்தபடி சிரித்த முகத்துடன் பிரிந்தது.

அவளோ திகைத்து நின்றாள், கண்களில் கண்ணீர் மல்க அவனது உயிரை பார்த்து கொண்டிருந்தாள், வேறு என்ன செய்ய இயலும் அவளால்.

அப்பொழுது அவளது பார்வை அவன் கையில் இருந்த பரிசு பொருளின் மீது பட்டது, அது என்னவென்று எடுத்து பார்த்தாள், அதில் இதய வடிவில் அவனது முகம், அதனுள்ளே சிறியதாய் அவளது முகம்.

அந்த கடிதத்தை படிக்க ஆரம்பித்தாள், அதில் எழுதி இருந்தது...

அன்பே ! நீ என்னிடம் கேட்டாய் உன்னை எவ்வாறு காப்பேன் என்று ...

நினைத்துக்கொள், நீ ஒரு அடர்ந்த இருளில் இருக்கிறாய்...
உன்னை சுற்றிலும் இரத்த வெள்ளம்,
உன்னால் நகர கூட முடியவில்லை,
இரத்த வெள்ளத்தின் நடுவில் நீ ...

சுற்றிலும் இருட்டு...

ஆங்காங்கே பச்சை பச்சையாய் சிறிய கொடி போல் உன்னை சுற்றி இருக்க,

நீ அச்சத்தின் உச்சத்தில் காணப்படும் நேரம், உன் காதினுள் டம் டம் டம் என்று இடியின் ஓசை.

நீ கதறி அழுது சப்தமிடுகிறாய், அப்பொழுது என் இதயத்தில் கை வைத்து சொல்லுவேன், கலங்க வேண்டாம் அன்பே.

நீ பத்திரமாக இருக்கிறாய் என் இதயத்தில்.

நீயும் உன் காதலும் என்னை விட்டு வெளியேற வேண்டுமானால், என் இதயத்தை கிழித்துக்கொண்டு தான் வெளியேற வேண்டும்.

ஏனெனில், நீ வெளியேறி விட்டால் என் இதய துடிப்பு நின்று விடும் . . . !

எழுதியவர் : முஹம்மது உதுமான் (7-Nov-19, 2:35 pm)
சேர்த்தது : முஹம்மது உதுமான்
பார்வை : 461

மேலே