கொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் - பகுதி 26
அவன் பார்க்கிறான் என்பது சுஜிக்கு நன்றாகவே தெரிந்தது. போதையில் இருந்த போதிலும். அவன் அணிந்திருந்த கடல் நீல டிசர்ட் மற்றும் முட்டி வரை அணிந்திருந்த கருப்பு பேண்ட், கையில் குத்தியிருந்த பச்சை. இப்போது தலைக்கேறியிருந்த போதை கொஞ்சம் இறங்க ஆரம்பித்தது சுஜிக்கு.
நிமலன் கையில் பச்சை இருக்காது. அவனுக்கு பச்சை குத்துவது என்றால் பயம். அலறி அடித்து ஓடிய சம்பவம் நிறைய உண்டு. அப்படி இருக்க இவன் கையில் எப்படி பச்சை இருக்க முடியும். மஹில் சஹிஸ்ன்னு வாய்ப்பே இல்லை.மஞ்சள் சட்டை அணிந்து, கயலோடு கண் முன் ஆடிக்கொண்டிருக்கின்றானே. அப்படி என்றால் யாரவன், யோசிக்கும் போதே முழு போதையும் இறங்கியது சுஜிக்கு. பாடலும் முடிந்தது.
இதுவரை மேடையில் புழுவை போல் இடுப்பை நெளித்துக் கொண்டிருந்தவள் அவனை பார்த்தவாறே மேடையிலிருந்து கீழே இறங்கினாள். அவனின் தலை முடியும், அதன் வண்ணமும் அதை அவன் சீவி இருக்கின்ற விதமும் நிமலனுக்கு எதிர்மறையாகவே இருந்தது.
பக்கென்றது சுஜிக்கு. யாரிவன் என மண்டையை அவள் பீய்த்துக் கொண்டு சுஜியின் கண்கள் மீண்டும் மஹிலை தேடியது. அவன்தான் இவனோ என்ற எண்ணத்தில்.அதற்குள் எமியும் விமலும் சேர்ந்து சுஜியின் கைகளை ஆளுக்கு ஒருவராய் பிடித்து கொள்ள கயல் சுஜியின் வாயில் கிளாஸ் நிரம்ப இருந்த Margarita - வை ஊற்றினாள்.
பிறகென்ன, மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏற தொடங்கிய கதைத்தான். பாடல்கள் ஒருசேர ஒலிக்க, ஆடலும் பாடலுமாய் அனைவரும் ஆங்காங்கே கூத்தடிக்க; 'அந்த' நிமலன் சுஜியை நோக்கி வந்தான்.
ஆடிக்கொண்டிருந்த சுஜியின் பின்னால் வந்தவன், சுஜியின் திரும்பிய வேகத்தில் அவளின் சுருள் கூந்தல் பட்டு தடுமாற, அவளும் தடுமாற விழ போனவளை கைத்தாங்கலாய் பிடித்தான் 'அந்த' நிமலன்.
போதை கொண்ட பேதை சுஜியோ, தன் இடையை பிடித்தவனின் முகத்தாடையை பிடித்து,
சுஜி: என்னடா நிமலா, இன்னிக்கு ரொம்ப அழகா இருக்க ?
அவளின் உளறல் மழலையின் உளறலாய் இருந்தது. சிரித்தவன் அவளை தூக்கி நிறுத்தினான். அதிக அளவு tequila உள்ளே சென்றதால் அதனை ஜீரணிக்க முடியாத சுஜி 'அந்த' நிமலன் மீதே வாந்தி எடுத்து வைத்தாள்.
வாந்தி எடுத்தவள் ஒழுங்காய் ஓரிடத்தில் நிற்காமல் அங்கும் இங்குமாய் ஆடிக் கொண்டு, வாயில் ஒழுகியிருந்த வாந்தியையும் துடைக்க நிதானமின்றி 'அந்த' நிமலனின் ஆடையை பிடித்து இழுத்துக் கொண்டு அலுசாட்டியம் செய்து கொண்டிருந்தாள்.
அவனின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டு சிறுபிள்ளைத் தனமாய் அவனின் நெஞ்சில் வாய் வைத்து கடிப்பதை போல் விளையாட்டு வேறு. இதற்கு மேல் இவளை இப்படியே விட்டாள் போவோர் வருவோர் அத்தனை போரையும் கடித்தாலும் கடிப்பாள் என்றெண்ணிய 'அந்த' நிமலன் அவளை அழைத்துக் கொண்டு போய் அவளின் ஹோட்டல் அறையில் விட்டு விடலாம் என முடிவு செய்தான்.
அவளை அலேக்காக கைகளில் தூக்கினான். குறும்புக்கார சுஜி அவன் கைகளிலிருந்து திமிறினாள். இது சரி பட்டு வராது என்றெண்ணி புல்லு கட்டை தூக்கி செல்வது போல் அவளை தலைக்குப்பற தூக்கி கொண்டு கடலை நோக்கி சென்றான்.
அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்தபோதும் அதனை பெருட்படுத்தாது, சுஜியோடு 'அந்த' நிமலன் கடலின் அலைகளின் நடுவில் சென்று அவளை தோள் பட்டைகளிலிருந்து கீழே இறக்கினான்.
இறங்கியவள் எங்கே அங்கே நேராக நிற்பது. இறக்கியதுதான் மிச்சம். அப்படியே போதையின் உச்சத்தினால் கடலின் உள்ளே இறங்கி விட்டாள்.
தொடரும்.....