பட்டுன்னாவாசு

எனதருமைப்பாட்டி
எஞ் செல்லப்பாட்டி!
அஞ்சு வருசம் தவமிருந்து
அழகா ஒரு குழந்தை
உன் பேரன் மனைவிக்கு
பொறந்திருக்குது பாட்டி.

இந்திப் பேரு வைக்கிறது
இக்கால நாகரிகம்.
எந்தப் பேரை வைக்கிறது?
எங்களுக்கு புரியவில்லை.

இந்தித் தொலைக்காட்சி
தொடரை எல்லாம் பார்க்கிற
தீவிர ரசிகை நீ!
எம் பையனுக்கு ஒரு பேரை
இன்னிக்கே சொல்லு பாட்டி.

பேரான்டி பேரான்டி
என்னருமை பேரான்டி
செய்தில ஒருபேரை
அடிக்கடி அடிக்கடி சொன்னாங்க.
அந்தப் பேரை நான சொல்ல

நீயும் கேட்டுக்கடா
ஞாபகத்தில் வச்சுக்கடா.
பத்துப் பதினஞ்சு நாளா
செய்தில நாங் கேட்ட பேரு
'பட்டுன்னாவாசு' 'பட்டுன்னாவாசு'.

உங்க தாத்தன் பேரு
வாசுதேவன், வாசுதேவன்
உனக்கு நான் வச்ச பேரு
சீனிவாசு சீனிவாசு.

எங்கொள்ளுப் பேரனுக்கு
'பட்டுன்னாவாசு'ன்னு
பேரை வச்சிருடா.
அவனும் ஒரு தலைவரா
வரவேண்டும் அந்தப் பேராலே.

'பட்டுன்னாவாசு'ன்னு
எம பையனுக்கு பேரு வச்சா
குறும்புக்காரன் எவனாவது
தட்டுன்னா சோறான்னு
கிண்டலடிச்சா என்ன செய்வேன்?

சொல்லறவனப் பிடிச்சு
தரத்தரனு இழுத்து வாடா;
அவன் வாயைக் கிழிச்சு
அலகு குத்திவிட.
நானிருக்க உனக்கு
பயம் ஏன்டா பேரான்டி?

என்னென்வோ பேரையெல்லாம்
கொழந்தைங்களுக்கு வைக்கறாங்க
'பட்டுன்னாவாசு'ன்னு
பேரு வச்சாத் தப்பில்லை.

எம் பையன் பேரை
'பட்டுன்னாவாசு'ன்னே
பிறப்புச் சான்றிழுக்கு
பதிவு செய்யப் போகிறேன்.

பாட்டி சொல்லைத் தட்டாத
பேரன் நானே தான்.
எங்கப்பன் வாசுதேவன்
நானோ சீனிவாசு
எம் பையன் பேரு
பாட்டி சொன்ன பேரு
'பட்டுன்னாவாசு' , 'பட்டுன்னாவாசு'.

எழுதியவர் : மலர் (1-Nov-19, 3:16 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 109

மேலே