தாடி இல்லாதவங்கள தொரத்திவிடு

திரைப்பட இயக்குநிரிடம் உதவியாளர்:

அய்யா நீங்க இயக்கும் அடுத்த படத்துக்கு புதுமுக நடிகர் தேர்வுக்கு விளம்பரம் குடுத்தோம். இருபது இளைஞர்கள் வந்திருக்கிறாங்க. அதில பதினஞ்சு பேரு கறுப்பா வாட்டம் சாட்டமா வந்திருக்கிறாங்க. அவுங்க மட்டுந்தான் நாம குறிப்பிட்டபடி இயற்கையான தற்கால குறுந்தாடியோட வந்திருக்கிறாங்க. அவுஅகள்ல ஒருத்தருகூட அழகா இல்ல.
@@@@@@@
சரி மத்த அஞ்சு பேரு?
@@@@@@
அவுங்க அஞ்சு பேரும் நல்ல செவப்பா அழகா இருக்கிறாங்க. யாருக்கும் தாடி இல்ல.
@@@@###@
தாடி இல்லாத அஞ்சு பேரையும் தொரத்திவிடய்யா.
@@@@@@@@
அய்யா, தாடி உள்ள பதினஞ்சு பேருல யாருமே லட்சணமா இல்லீங்களே.
@@@@@@@
யோவ் இது சிவாஜி, எம்ஜிஆர் காலம் இல்ல. நடிகர்கள் அழகா இருக்கணுங்கிற தேவையுமில்ல. நாஞ் சொல்லறபடி நடிச்சப் போதும்யா. சரி கறுப்பு பசங்கள சாய்ந்திரம் நாலு மணிக்கு வரச்சொல்லு. அவுங்கள நடிக்கச் சொல்லி ரண்டு வில்லன் ரண்டு கதாநாயகனைத் தேர்ந்தெடுக்கணும்.
@@@@@@@
சரிங்க அய்யா

எழுதியவர் : மலர் (1-Nov-19, 2:35 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 121

மேலே