கொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் - பகுதி 29

கண்கள் சொருகி மூழ்க போனவனின் காதில் துல்லித ஓசை ஒன்று கேட்டது.

இசை வந்த திசை நோக்கி Mahihi ! என முணுமுணுத்தான். ஆம், அது Mahihi- யின் குரல். Mahihi வேறு யாருமல்ல உலகில் உள்ள அனைத்து கடல் பகுதிகளிலும் வசிக்கக் கூடிய பல்லாயிரக்கணக்கான திமிங்கலங்களில் டால்பின் வகையை சேர்ந்த ஓர்க்கா சுறா ஆகும். இதை கொலைகார திமிங்கலம் எனவும் சொல்லலாம். டால்பின் வகையிலேயே மிகவும் பெரியதானதாகும்.

இந்த Mahihi 'அந்த' நிமலனுக்கு மிகவும் பரிட்சயமான திமிங்கலம் ஆகும். அவன் வைத்த பெயர் தான் இந்த Mahihi. Hawaiian மொழியில் டால்பினை இப்படித்தான் அழைப்பார்கள். அதையையே, பெயராக வைத்தான் 'அந்த' நிமலன் இந்த பெண் ஓங்கில் சுறாவிற்கு.

Mahihi - யை, அவன் முன்பொருநாள் Hawaiian தீவில் Cruise கப்பலில் பயணிக்கும் போது கண்டு கொண்டான். அவன் அங்கிருந்த எட்டு நாட்களும் தவறாமல் கடலுக்கு வருகின்ற நேரமெல்லாம் இதுவும் வந்து வாஞ்சையாக விளையாடி விட்டு சென்றதுடன் அவனிடத்தில் மிகவும் நெருக்கமாகவே ஒட்டிக் கொண்டது.

அதனாலேயே, என்னவோ மூன்று மாதத்திற்கு ஒரு முறை Hawaiian தீவிற்கு வரும் இவன். இப்போதெல்லாம், மாதம் ஒருமுறை இங்கு வந்து போகிறான். Mahihi - யும் வேறு இடம் புலராமல் இங்கேயே சுற்றித் திரிகிறது.

இப்போது பிரச்சனை என்னவென்றால், ஓர்க்கா வகை திமிங்கலங்கள் வேகமாக நீந்தக் கூடியவை, அதோடு சுறா வகைகளை கண்டால் அதற்கு பிடிக்காது. அவற்றுடன் சண்டையிடும்.

முடிந்தால் கடித்து கொன்றும் விடும். மனிதர்களை பெரிதாக ஒன்றும் செய்யாது இருந்தாலும் ஒரே ஒரு முறை மட்டும் மனிதனை தாக்கிய சம்பவம் பதிவில் உள்ளது.

Mahihi - யுக்கும் 'அந்த' நிமலுனுக்கும் மட்டுமே தெரிந்த அந்த ஒரு விதமான ஓசையை எழுப்பிக் கொண்டே வேகமாய் நீந்தியபடியே வந்தது Mahihi. 'அந்த' நிமலன் தன் பலங்கொண்டு வேறு வழியின்றி அவனும் அதே ஓசையை எழுப்பினான்.

வழக்கமாக இரைகளை பிடித்து தின்னவே இது போன்ற எதிரொலியை இந்த Killer Whales பயன்படுத்தும். இவை எழுப்பும் ஒலியானது எதிரே செல்லும் மற்ற மீன்கள் மற்றும் திமிங்கலங்களின் மீது பட்டு ஒலி அலைகளாக எதிரொலிக்கின்றன.

அந்த ஒலி அலைகளை படவடிவத்தில் கிரகித்துக்கொண்டு அது எந்த வகையான இரை எந்த திசையில், எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு தனது வேட்டையைத் துவக்குகின்றன. பல நேரங்களில் தனது இரையைத் துரத்திக்கொண்டு கரையை ஒட்டிய பகுதிகளுக்கும் இவை வருவதுண்டு.

திமிங்கல சுறாவோ பயப்படும் என்று நினைத்திருந்தால், மாறாக அதுவும் 'அந்த' நிமலனுடன் சேர்ந்து அதே ஓசையை எழுப்பியது.

இப்போது, சுஜியோடு சேர்ந்து 'அந்த' நிமலனும் தண்ணீரில் மூழ்கினான்.

சாதாரணமாகவே மணிக்கு 10 முதல் பதினாறு கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ஆனால், இம்முறை மணிக்கு 50 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் வந்தது அந்த ஓக்கரா திமிங்கலம்.

ஓர்க்கா திமிங்கலங்கள் குழுக்களாகவே வாழும். பெரிய ஆண் பெண் திமிங்கலங்களுடன் குட்டி திமிங்களுங்களும் ஒரு சேர அக்குழுவில் இருக்கும். அதே குழுவோடு வந்துச் சேர்ந்தது Mahihi.

எல்லாம் புரிந்தது போல, திமிங்கலங்கள் எல்லாம் அவர்களுக்கான மொழியில் பேசிக் கொள்ள சுஜி மற்றும் 'அந்த' நிமலன் இருவரையும் பாதுகாப்பாக வட்டமிட்டு கரை சேர்க்க தீர்க்கமாயினர்.

மனிதர்களுக்கு இல்லாத மனித நேயம் ஒரு சில வேளைகளில் விலங்குகளிடம் அதிகமாகவே இருக்கிறது. இந்த திமிங்கல சுறாவையும் டால்பின் சுறாக்களை போலவும்.

தொடரும்...

எழுதியவர் : தீப்சந்தினி (21-Nov-19, 11:46 am)
சேர்த்தது : தீப்சந்தினி
பார்வை : 327

மேலே