ரகசியம் 12
அன்பும் அவன் தங்கையும் ஆவலுடன் கேட்டுக்கொண்டிருந்தனர் பெரியம்மா சொன்ன கதையை அந்த இன்னொரு அதிசயமான ஒன்று ஊருக்கு அப்பால் இருக்கும் அந்த காட்டின் நடுவே இருக்கும் அம்மன் சிலை மிகவும் அற்புதமான அம்மன் சிலை.
இந்த ஊரில் திருவிழா என்றால் இந்த அம்மனுக்கு ஜெகஜோதியாக அலங்காரம் செய்து சுற்றியிருக்கும் அனைத்து ஊர் மக்களும் வந்து அம்மனை வழிபாடு செய்துவிட்டு போவார்கள்.
ஒரு நாள் இரண்டு நாள் அல்ல நான்கு நாட்கள் நடைபெறும் திருவிழா பல ஊர்களுக்கும் அறிந்திருந்த உண்மை.
காட்டின் நடுவே அமைந்திருக்கும் அந்த அம்மன் சிலை சுற்றி நான்கு தூண்கள் அமைந்திருக்கும்.மண்டபங்கள் எதுவும் கிடையாது.... பூசாரி மட்டுமே அம்மன் அவரருகே இருப்பார் மற்றவர்கள் பத்தடி தொலைவில் மட்டுமே இருந்து தரிசனம் செய்வர்... ஆண்டுகள் தோறும் பாரம்பரியமாக நடந்து கொண்டிருக்கின்றது..
அதுமட்டுமல்லாது ஊரின் நடுவில் இருக்கும் அந்த கிணற்றிலிருந்து 108 குடம் தண்ணீர் கொண்டுபோய் இந்த அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும்..
திடீரென ஒருநாள் அந்த அபிஷேகம் நடைபெற்று கொண்டிருக்கும் அந்த வேலையில்.... ஊருக்கு வெளியே இருந்து வந்த ஒரு குடும்பத்தில் ஒரு கன்னிப்பெண் இறந்து கிடந்தால்.....
அதற்குப் பிறகு பூஜைகள் நடத்தப்பட்டன இரவு வேளையில் அவள் கொலுசுகள் அணிந்து அந்த காட்டில் சுற்றுவதாகவும் தகவல்கள் வெளியானது அது அவளை தொடர்ந்து பெரிய ஆரம்பித்து இருக்கக்கூடாது என எவரும் அந்தக் காட்டிற்கு போகவில்லை...
அதுமட்டுமல்லாது கிணற்றிலிருந்து தண்ணீர் எவரும் எடுக்கவில்லை.. வற்றிப் போக ஆரம்பித்தது....
இதையெல்லாம் அறிந்து ஊர் மக்கள் இரவு ஆறு மணி மெயில் ஆனால் வீட்டிற்கு சென்று விடுவார்கள் எவரும் வரமாட்டார்கள் அமாவாசையிலும் எவரும் வெளி வர வரட்டார்கள்.....
இரண்டாண்டுகளாக இவ்வாறு நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் காவல்துறையினர் இதனை விசாரிக்க மேற்கொண்டனர்...
விசாரணை முடிவு என்ன ஆனது?
என்ன ரகசியம் இதில் இன்னும் அடங்கி இருக்கிறது?.....