கொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் - பகுதி 27

சுஜியை ஓரளவுக்கு நிக்க வைத்து, அலைகளின் சீற்றத்தால் கண்களில் பட்டுக் கொண்டே இருந்த அந்த கடலின் உப்புத் தண்ணீரை தன் இடது பக்க தோள் பட்டையால் துடைக்க முனைந்த போதுதான் சுஜி கடலினுள் தடுமாறி நிற்க முடியாமல் உள்ளே இறங்கினாள்.

'அந்த' நிமலன் : Shit ! No ! No ! No ! No ! No !

என அலறிக் கொண்டே கடலினுள் தாவினான். கடலின் தண்ணீர் அவ்வளவு குளிராக இருந்தது. சிலிர்த்துக் கொண்டான் 'அந்த' நிமலன். இருட்டிய கடலினுள் இந்த சுஜியை எங்கே சென்று தேடுவது.

அவனின் நீர் புகா கைக்கடிகாரத்தின் ஓரத்தில் இருந்த பட்டனை அழுத்தினான். கைக்கடிகாரத்திலிருந்து வெளிப்பட்ட வெளிச்சம் ஏதோ ஓரளவுக்கு அந்த கும்மிருட்டில் அவனுக்கு உதவியாக இருந்தது. அவன் கண்களை அலை பாய விட்டான் சுஜியை தேடி.

ஆழ் கடல் ஆனாலும், டைவிங் தெரிந்த பட்ச்சத்தில் அவனுக்கு அது ஒன்றும் பெரிய விசயமாக தெரியவில்லை. யோகாவில் கைதேர்ந்தவனும் கூட. அதனால், தற்போதைக்கு oxygen பிரச்னையும் இல்லை. ஆனால், சுஜி தான் தாங்குவாளா என்று தெரியவில்லை.

ஜில்லென்ற தண்ணீர் பட்டால் போதை கொஞ்சமாவது இறங்கும் என்ற நம்பிக்கையில் அவளை கடலுக்கு கூட்டி வந்தால், இப்படி கடலில் காணாமல் அல்லவா போய் விட்டாள். மூளையில் இப்படி பல சிந்தனை ஓடிக் கொண்டிருக்க அவனின் தேடலை துரித படுத்தினான் 'அந்த' நிமலன் ; காரணம் மீன்கள் மட்டுமின்றி அந்த கடலில் சுறா மீன்களும் இருக்கின்றன.

மனித வாடையை கண்டு கொண்டு சுஜியை கடித்து தின்று விட்டால் அவளுடன் வந்தவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்றெண்ணி தலையை வலதும் இடதுமாய் திருப்பியன் எதிரே கண்ட காட்சியில் ஸ்தம்பித்து நின்றான் சிலையாய் அதிர்ச்சியில்.

அவன் எதிரே சுஜி, மயக்க நிலையிலே தள்ளப்பட்டுக் கொண்டே வந்தாள். ஆம், திமிங்கில சுறா அவளை தள்ளிக் கொண்டு மெதுவாய் நகர்ந்து வந்தது. உலகத்திலேயே மிகப் பெரிய அரியவகை ராட்ச்சத சுறா.

அதுவும் hawaii - யன் கடற்கரைகளில் முன்பு வாழ்ந்து பின் தற்ப வெற்ப சூழ்நிலை காரணங்களால் பற்பல எல்லைகளுக்கு புலம் பெயர்ந்து சென்று இன்று hawaii - யனில் திமிங்கல சுறாவே இல்லை எனும் பட்ச்சத்தில் இப்படி வந்து கண் முன் நின்றால் பக்கென்று ஆகாதா.

என்னதான் சுறா இனமாக இருந்தாலும், திமிங்கல சுராவிடம் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை காரணம் இவ்வகை சுறாக்கள் மனிதர்களை ஒன்றும் செய்யாது. ஏதாவது ஒன்று இரண்டு மட்டும் வளர்கின்ற காலங்களில் கொஞ்சம் குறும்புத்தனம் மிக்கதாகவும் சிலது மூர்கத்தனமாகவும் நடந்துகொள்ளும்.

இருந்தபோதும், கடல் வாழ் ஆராச்சியாளர்கள் எப்போதும் எச்சரித்துக் கொண்டே இருப்பார்கள் ஜாக்ரதையாக இருக்க, காரணம் என்னதான் இருந்தாலும் அது சுறாவின் இனம். எந்த நேரத்தில் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம். புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ற கதைதான்.

குறிப்பாக இந்த சுறா மனிதர்களை தின்னாது. அதுவரை சுஜி தப்பித்தாள். அதையும் தாண்டி அகலமான வாய் கொண்ட திமிங்கல சுறா வாய் திறந்து அதனுள் சுஜி தவறுதலாக சென்று விட்டாலும் பயப்படுவதற்கில்லை காரணம் திமிங்கல சுறா அதன் தினசரி உணவை தவிர்த்து வேறு உணவை தீண்டாது. ஆதலால், நிச்சயம் சுஜியை வெளியே துப்பிவிடும்.

'அந்த' நிமலனின் கைக்கடிகாரத்தின் வெள்ளை வெளிச்சம், மேனியெங்கும் நட்சத்திரங்களை போல் அச்சில் கொண்டு கண் முன் வந்துக் கொண்டிருந்த ராட்ச்சத திமிங்கல சுறா. சுறாவால் தள்ளப் பட்டு தண்ணீரின் ஓட்டத்திற்கு ஏற்ப மயக்க நிலையில் இருந்த வண்ண பூக்கள் நிறைந்த dress அணிந்திருந்த சுஜி.

அவளின் சுருள் முடி அந்த குளிரிய தண்ணீரில் அங்கும் இங்குமாய் கலந்தோடியது, அவளின் கை கொலுசு கால் கொலுசு சத்தம் மென்மையாய் கேட்டது தண்ணீரின் அசைவில். சுஜியின் தலைக்கு மேல் சுற்றிக் கொண்டிருந்த குட்டி குட்டி வண்ண மீன்கள்.

'அந்த' நிமலன் நின்ற இடத்திலிருந்தே திமிங்கல சுறா சுஜியை அவனிடம் தள்ளி வரும் வரை காத்திருந்து அக்காட்சியை ரசித்தான். அந்த அழகான காட்சியை அவனின் அதே கைக்கடிகாரத்தைக் கொண்டு வீடியோவும் எடுத்தான் 'அந்த' நிமலன்.

தொடரும்....

எழுதியவர் : தீப்சந்தினி (6-Nov-19, 2:46 pm)
சேர்த்தது : நிர்மலன்
பார்வை : 219

மேலே