மித்தில் மித்திலா நித்தில் நித்திலா

மனைவி நதியாவுக்கு
மணமாகி ஓராண்டில்
பிறந்தது நான்கு குழந்தைகள்
நான்கும் பெண் குழந்தைகள்.

பாட்டி சொன்னார்
நான்கு மகாலட்சிகளைப்
பெற்ற மனைவி நதியாவும்
நானும் புண்ணியம் செய்தவர்களாம்.

நான்கிற்கும் அதிக
வேறுபாடு இன்றி
பெயர் சூட்ட வேண்டுமே
இந்திப் பெயர்களாக.

தமிழ்ப் பெயர்கள
பிள்ளைகளுக்குச் சூட்டுவது
தற்காலத் தமிழர்களின்
வழக்கம் இல்லையே!

என்ன செயவதென்று
புரியாதிருந்த வேளையில்
இந்திக்கார நண்பன் ஒருவன்
உதவ முன்வந்தான்.

காலையில் பிறந்த
இரடட்டைப் பெண்
குழந்தைகளின் பெயர்
மித்தில் மித்திலா!

பிற்பகலில் பிறந்த
இரட்டைப் பெண் குழந்தைகளுக்கு
நானும் நநியாவும் சூட்டிய பெயர்கள்
நித்தில் நித்திலா.

பொருத்தமான பெயர்களை
பிள்ளைகளுக்குச் சூட்டி
பெருமிதம் அடைந்த
பெற்றோர்கள் நாங்கள்.

"அருமை பெயர்கள்" என்று
ஊராரும் உறவினரும்
நண்பர்களும் சொன்னபோது
உச்சி குளிர்ந்தது எங்களுக்கு.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Mithil = Kingdom (unisex name)
Nithila = Kingdom (unisexname)
Nithil = pure like pearl (unisex name)
Nithila = pure like pearl (unisexname)

எழுதியவர் : மலர் (6-Nov-19, 2:58 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 82

மேலே