சரண்யா நந்தகோபால் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சரண்யா நந்தகோபால் |
இடம் | : வேலூர் |
பிறந்த தேதி | : 21-Oct-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 14-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 424 |
புள்ளி | : 59 |
நீயாகவே முடிவு செய்.
நீயாகவே செயல்படு.
தோற்றுப் போ!
அதிலே ஒரு லாபம்,
'யாரையும் குற்றவாளியாக்கதவன்' என்ற பெயர் உனக்குக் கிடைக்கும்.
-கண்ணதாசன்
பல பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புக்களை வெளியிடும் கீற்று இணையத்தளத்தில் தோழர் கவிஜி... தோழர் சேயோன் யாழ்வேந்தன். தோழர் தர்மராஜ்.. தோழர் கிருத்திகா , தோழர் கெளதமி தமிழரசன் , தோழர் தேவ் உள்ளிட்ட நமது தோழர்களின் ஆளுமையான திறன்மிக்க படைப்புகளும் தொடர்ந்து அணிவகுக்கின்றன. அதில் இன்று வெளியான எனது கவிதை
அப்போது நான்
அப்படியிருந்தப்போதும்
போர்...!
இப்போது நான்
இப்படியிருந்தப்போதும்
போர்...!
ஏழைச் சிறுக்கியாய்
இழுத்து மூடிய ஆடையோடு
உலாவியப் போதும்
போர்..!
உலக அழகியாய்
இடை தொடை திறமைக்காட்டி
பூனை நடையின்போதும்
போர்...!
எங்கேயும் எப்போதும்
எனக்கு..
என் மீது
என் உடல் மீது
போர்..................!
அய்யோ போர்....!
என் யாக்கைப் பிண்டங்களை
பண்டங்களாக்கி அதில்
ஆண்வர்க்க காமவிழிகள்
நடத்தும்
போரில் நித்தம் நித்தம்
தப்பித்துப் பிழைத்து
சாதித்துக் கொண்டே
செத்துக்கொண்டிருக்கிறேன்
செத்துக்கொண்டே
வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்.
நானும்.....
என்னைப் போல
மங்கையர் உலகமும்.....!
ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்த அந்த விமானம் ஒரு கார்மேகத்துக்குள்ளே சென்றது.விமானம்கட்டுப்பாட்டை இழந்து அங்கும் இங்குமாக சரியத் தொடங்கியது.பயணிகள் பீதியில் அலரினார்கள்.ஒரு சிறுமி மட்டும் எதையுமே பொருட்படுத்தாமல் விளையாடிக் கொண்டிருந்தாள்.ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின்பு விமானம் தரை இறங்கியது.
அப்போது ஒருவர் அந்த சிறுமியிடம் கேட்டார்.இவ்வளவு ஆபத்தான நிலையிலும் உன்னால் மட்டும் எப்படி சந்தோசமா விளையாடிக்கொண்டிருக்க முடிந்தது.
சிறுமி சொன்னால்."எங்க அப்பா தான் இந்த விமான பைலட் அவர் என்னை எப் (...)
குடும்ப விழாக்களுக்கு
மட்டும் அணியப்படும்,
பாரம்பரிய ஆபரணங்களுள்
ஒன்றாய் ஆகிவிட்ட,
தாலி!!
மரமல்லிப் பூக்களின்
மென் உதிர்வைக்
காட்சிப்படுத்திய நாளில் தான்
விமான விபத்தில்
சில நூறுபேர்
மாண்டார்கள் !
வெண்புறா ஒன்றின்
சிறகசைப்புகளுக்கு
பேனா
செவி சாய்த்தபோதுதான்
பக்கத்து நாட்டில்
பூகம்பம் வந்தது !
ஒரு
மீன்தொட்டியின்
அழகியல்
பாடுபொருளானபோது தான்
அவன்
தீவிரவாதிகளால்
எரிக்கப்பட்டான் !
மழையின்
மண்வாசனையைப்
பதிவு செய்து
புல்லரித்த நாளில்தான்
தண்ணீரின்றி
தற்கொலை செய்த
விவசாயியின்
பெட்டிச்செதி
கண்ணில் பட்டது !
தேவதைகளுக்கும்
காதலிக்குமுள்ள
பத்து ஒற்றுமைகளைப்
பட்டியலிட்டு
நிமிர்ந்த போதுதான்
ஓர் இளம்பெண்ணை
வன்புணர்வு செய்து
வீ
எவ்வளவு விரட்டினாலும்
என்னை விட்டு அகல மறுக்கும்
என் உற்ற தோழியாகி விட்ட
என் தனிமை!!
என்னுடைய பழைய தவறுகளை
சுட்டிக்காட்டி குறை கூறுகிறீர்கள்.
பரவாயில்லை..
ஆனால் என் முதுகின்
அழுக்கைப் பற்றி பேசும் முன்
உங்கள் முதுகைப் பற்றியும்
ஏன் நீங்கள் யோசிக்க கூடாது???
அரசு கஜானா
தள்ளாடும்போதெல்லாம்
தாங்கிபிடிக்கிறார்கள்
டாஸ்மாக் வாடிக்கையாளர்கள்.
-இரா.சந்தோஷ் குமார்
என்னுடைய பழைய தவறுகளை
சுட்டிக்காட்டி குறை கூறுகிறீர்கள்.
பரவாயில்லை..
ஆனால் என் முதுகின்
அழுக்கைப் பற்றி பேசும் முன்
உங்கள் முதுகைப் பற்றியும்
ஏன் நீங்கள் யோசிக்க கூடாது???
பொம்மை கடையின்
காசில்லாத கல்லாப் பெட்டியைப் பார்த்து
நக்கலாய் சிரித்துக் கொண்டிருக்கும்கும்
விற்று தீர்க்காத குபேர பொம்மைகள்!!
பொம்மை கடையின்
காசில்லாத கல்லாப் பெட்டியைப் பார்த்து
நக்கலாய் சிரித்துக் கொண்டிருக்கும்கும்
விற்று தீர்க்காத குபேர பொம்மைகள்!!
எவ்வளவு விரட்டினாலும்
என்னை விட்டு அகல மறுக்கும்
என் உற்ற தோழியாகி விட்ட
என் தனிமை!!