ராஜேந்திரன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ராஜேந்திரன் |
இடம் | : நாகர்கோவில் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 55 |
புள்ளி | : 7 |
நான் ஒரு இனிமையான மாணவன் ...
மனதிற்குப் பிடித்தவரை
மணாளனாய் வரிந்திட்டேன்
மனதார சம்மதித்து
மகளென்னை வாழ்த்திடுவாய் !
இருமனமும் கலந்தபின்னே
இணைத்துவைத்தல் முறைதானே !
இடையூறாய் நீயிருந்தால்
இதயம்நூறாய் வெடித்திடுமே !
தாயேயுன் சம்மதத்தை
தயவுடனே வேண்டுகின்றேன்
தயங்குவதேன் கலங்குவதேன்
தடுப்பதெது சொல்லம்மா !
களங்கமில்லா காதல்தான்
கட்டுப்பாடு மீறலையே
கடலளவு கண்ணீர்விட்டும்
கல்மனமும் கரையலையே !
சாதிவெறி கொண்டவுள்ளம்
சம்மதிக்க மறுக்கிறதோ ?
சாகும்வரை போராடுவேன் - நீ
சரிசொலாமல் மணமுடியேன் !
சாதிக்குள்ளே மணம்செய்தால்
சாகாவரம் கிடைத்திடுமோ ?
சந்தோசம் நிலைத்திடுமோ ?
சால்பெனக்குத் தந்திடுமோ ?
நிலவே
உன்
செவ்விதழைக்காட்டு -
பசியாற்றிக்கொள்கிறேன் !!
மலரே
உன்
கண்ணிமைகளைக்காட்டு -
எனைமாற்றிக்கொள்கிறேன் !!
தேனே
உன்
பொன்முகத்தைக்காட்டு -
உனக்காகவே நான் !!!
- காதல் கொண்ட மனதின் பிதற்றல்
காதல்
என்னவனே
எப்போது
கிடைக்கும்
உன்
தீர்க்க தரிசனம்
என் மனமாயினும்
உன் நினைவில்
ஆறுதல்கொள்ள
என் கண்களோ
உனைக்காணமல்
கண்ணீரில் கரைகிறது
வாராயோ
என் கண்களுக்கு
தரிசனம்
தாராயோ !!!
நேசம் என்பது ஒரு சுகம் -
நேசிக்கப்படுவது என்பது அதை விட
சுகம்...
நண்பர்கள் (57)

செல்வமணி
கோவை

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

பொங்கல் கவிதை போட்டி
தமிழ் தேசியம்

மலர்91
தமிழகம்
