வர்க்கப் போர் -சந்தோஷ்
அப்போது நான்
அப்படியிருந்தப்போதும்
போர்...!
இப்போது நான்
இப்படியிருந்தப்போதும்
போர்...!
ஏழைச் சிறுக்கியாய்
இழுத்து மூடிய ஆடையோடு
உலாவியப் போதும்
போர்..!
உலக அழகியாய்
இடை தொடை திறமைக்காட்டி
பூனை நடையின்போதும்
போர்...!
எங்கேயும் எப்போதும்
எனக்கு..
என் மீது
என் உடல் மீது
போர்..................!
அய்யோ போர்....!
என் யாக்கைப் பிண்டங்களை
பண்டங்களாக்கி அதில்
ஆண்வர்க்க காமவிழிகள்
நடத்தும்
போரில் நித்தம் நித்தம்
தப்பித்துப் பிழைத்து
சாதித்துக் கொண்டே
செத்துக்கொண்டிருக்கிறேன்
செத்துக்கொண்டே
வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்.
நானும்.....
என்னைப் போல
மங்கையர் உலகமும்.....!
இப்படிக்கு,
பெண் வர்க்கம்...!
--
இரா.சந்தோஷ் குமார்.