எடுப்பவன் கையில்

ஏதோவொரு
அமிலத்தின் வன்மை
என் தோழியை
இருட்டறைக்கு சொந்தக்காரியாக்கியது …

மற்றொரு
அமிலமொன்றின் மகிமை
என் தங்கைக்கு
மறுஜென்மம் அளிக்கிறது !!!

சில அணுக்களின்
அளவுக்கடந்த காதல்
பிணக்குவியல்களை
பெற்றெடுக்கின்றன ஒருபுறம் …

ஒருசில
வினைபடுபொருட்களின் வீரியம்
உயிர்கொல்லிநோய்களுக்கும்
அருமருந்தாகிறது மறுபுறம் !!!

உணவின் ருசிக்காக ,
பணவர்கத்தின் பசிக்காக
காரங்கள் பல கட்டுபாடிழக்கின்றன
வியாபாரச் சந்தையில் …

தாயில்லா கரு ,
தந்தையில்லா சிசு ,
ஆச்சரியங்கள் பல அரங்கேறுகின்றன
வேதியலின் விந்தையில் !!!

நெருப்பின் பயன்
எடுப்பவன் கைகளில்

சுட்டும் எரிக்கலாம் …
சுடரும் ஏற்றலாம் !!!

எழுதியவர் : chelvamuthtamil (17-Jun-15, 8:42 am)
பார்வை : 148

மேலே