அழகென்றால் இதுதானா

வண்ணம் பூசிய
காகித மலர்களெல்லாம்
சாயம் போகின்றது,
மழையின் நனைகையில்....

குடையுடன் நீ வலம் வருவது
நனைந்துவிடக்கூடாது என்பதற்க்காகவா....?
சாயம் கறைந்துவிடக்கூடாது என்பதற்க்காகவா....?

விழாக்காலங்களில் வீடுகளுக்கு,
வெள்ளையடிக்கின்றார்களோ இல்லையோ,
அவரவர் முகங்களுக்கு வெள்ளையடித்துக் கொள்கின்றார்கள்....!

பருவம் கடந்த பின்னும்
புருவ அலங்காரம்
கிழவிகளுக்கு.....

அழகு நிலையங்களெல்லாம்
அழகாய் இருக்கின்றது
அழகற்றவர்களை அழகுபடுத்திய
வருமானத்தால்....

தரை தொடும் நீளத்தில்
கூந்தல் வளர்த்தார்கள்
அன்று,
இன்றோ...!
கூந்தலின் நீளம் இடையை தொடுவதே
இமாலய சாதனையாகிவிட்டது.....!

கரப்பான் பூச்சிகளையும்
வண்ணத்துப் பூச்சிகளாக்கியது
அழகு நிலையம்....!

அன்புக்கு முக்கியத்துவம் கொடுத்த பெண்களெல்லாம்
இன்று அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால்
இப்போது பிறக்கும் குழந்தைகள்,
தாய்ப்பாலின் வாசத்தைக் கூட,
உணர்ந்திருக்கமாட்டார்கள்......
ஆகவே தான்,
குழந்தைகளெல்லாம் நோயாளியாகிவிட்டார்கள்.....

எழுதியவர் : அகத்தியா (17-Jun-15, 4:17 am)
பார்வை : 83

மேலே