மழையில் நினைந்த புறாக்கள்

மழையில் நினைந்த புறாக்கள். 🌧

மழையில் நினைத்த இரண்டு புறாக்கள்.
தஞ்சம் அடைந்தது ஓர் அறையில்.
இரண்டும் குளிரில் நடுங்கியது.
மழை விட்டபாடில்லை.
இரண்டும் வெளியே செல்ல வாய்ப்பில்லை.
ஆடை முழுவதும் நினைந்த புறாக்கள்.
வேறு ஆடைகளுக்கு எங்கு செல்லும்.
ஆண் புறாவின் கண்கள் பெண் புறாவின் கழுத்துக்கு கீழே ஒரு நொடி சென்றாலும், சின்னதாக துளிர்விட்ட
காமத்தை விழுங்கி
கண்ணியத்தை இயல்பாக கடைபிடித்தது.
பயம் ஒரு பக்கம்,
வெட்கம் ஒரு பக்கம்,
எப்படியோ ஆடையின் ஈரத்தை உலர்த்தியது பெண் புறா.
நன்றி என்றது பெண் புறா.
எதற்கு என்றது ஆண் புறா.
எதற்காக திரும்பி திசை மாறி நின்றீர்களோ அதற்காக.
ஏன் பதில் ஏதும் கூறாமல் மெளனம்.
இது என் இயல்பு என்றது ஆண் புறா.
வேறொன்றும் இதில் பெரியதாக இல்லை.
உங்களை போலவே உங்கள் பதிலும் இயல்பு,
மிக்க நன்றி என்றது ஆண் புறா.
மழை நின்றது.
புறாக்கள் அறையை விட்டு வெளியே வந்தது.
மீண்டும் உங்களை எப்போது சந்திக்கலாம்
பெண் புறா கேட்டது.
" மீண்டும் இதுமாதிரி மழைக்கு ஒதுங்கினால்" என்றது ஆண் புறா.
கலகலவென சிரித்த பெண் புறா
ஆண் புறாவை வைத்த கண் வாங்காமல் ........
- பாலு.

எழுதியவர் : பாலு (24-Sep-19, 3:19 pm)
சேர்த்தது : balu
பார்வை : 310

மேலே