என் காதலி 🌹

என் காதலி. 🌹

அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
காதல் வந்தது
அது ராமாயணம்.
அவளும் நோக்கினாள்
நானும் நோக்கினேன்
எங்கள் காதல் பிறந்தது.

பிறை நிலா
அவள் புருவம்.
வண்ண மீண்கள்
அவள் கண்கள்.
என் நெஞ்சை தைக்கும்
அம்பு
அவள் பார்வை.
காந்த விழியாளின்
கண்ணம்
இரண்டும் சந்தன கிண்ணம்.
அவள் இதழ்கள் கொவ்வை பழம்.
கொடியிடையாளின் நடை அழகோ
மான்களின் ஒட்டம்.

அவளை தாவணியில்
பார்க்க வேண்டுமே
காண
கண்கள் கோடி வேண்டும்
ரசிப்பதற்கு
அதுவும் அந்த மஞ்சள் நிற
தாவணியில்
அற்புதம்.
அவளே இனி
தரணியில் ஒரே அழகி.

ரதிக்கும் மன்மதனுக்கும் கடுமையான
சண்டையாம்.
இவள் அழகில்
மயங்கி மன்மதன்
பூமிக்கு வந்ததால்.

உலக அழகி போட்டியில்
இவள் கலந்து கொண்டால்
உறுதியாக கூறுவேன்
இவளை கண்டவுடன்
மற்றவர்கள் வாபஸ்
பெறுவார்கள்
போட்டியின்றி தேர்வு
உலக அழகி பட்டம் இவளுக்கே.

காட்டில் தவம் இருந்து
முனிவர் கூட்டம்
விழித்துக்கொண்டது.
தவத்தை முடித்து கொண்டது
முண்டி அடித்து ஒடி வந்தது.
இவள் அழகை ரசிக்க.

அடடா ! போட்டி அதிகம் ஆனது.
ஆதிக்க சக்தி அபகரிக்கும் முன்னே
முந்திக்கொண்டேன்.
நித்தம்
பார்வை பறிமாறப்பட்டது
பயத்தை தூக்கி எறிந்துவிட்டு
துணிவு துணை என்று
அவள் அருகே சென்றேன்.
என் இதயம் ஒலியை கேட்டாள்.
கண்களால் சம்மதம் என்றாள்.
என்னால் நம்ப முடியவில்லை
ஒரு முறை என்னை நானே கிள்ளிக்கொண்டேன்.
பிறவி பயன் அடைந்து விட்டேன்.
பறவையன காற்றில் பறந்தேன்.
தண்ணீரில் நடந்தேன்.
இதோ புறப்பட்டு விட்டேன்.
அந்த நிலவை எடுத்து வந்து
அவளுக்கு பரிசாக அளிபதற்க்கு.

-பாலு.

எழுதியவர் : பாலு (3-Mar-20, 8:16 pm)
சேர்த்தது : balu
பார்வை : 320

மேலே