காதல் பறவைகள்
காதல் பறவைகள்
கண்ணீரில் கரையும்
காதல் பறவைகள்
சோகத்தில் மிதக்கும்
சொக்க தங்கங்கள்
வேதனையில் வாடும்
காதல் பூக்கள்
சூழ்நிலை கைதியான
தியாக சீலர்கள்
மணகோட்டை கட்டிய
மணல் பொம்மைகள்
மாசுயில்லா காதல் செய்த மாணிக்கங்கள்
காதல் புறாகள்
காலத்தால் அழிக்க முடியாத காதல் சிற்பங்கள்
மூக்கோடு மூக்கு உரசிய
உள்ளங்கள் இணைந்தாலும்
ஊர் இடம் கொடுக்கவில்லை
அங்கங்கள் அணைத்தாலும்
அகிலம் விடவில்லை
பறவைகள் சிறகடித்து
பறந்தாலும்
பாச அம்பு பாய்ந்து
சிறகொடித்து சின்னாபின்னம் ஆக்கியதே
காதல் கோட்டை
அந்தஸ்து பீரங்கியால்
சுக்குநூறு ஆனது
சாதி அணுகுண்டால்
தரைமட்டம் ஆனது
ஏழை காதல்
எள்ளி நகையாடியது
தோற்று போன காதலர்கள்
தோற்காத காதல்
காயபட்ட உள்ளங்கள்
கலைந்து போயின
செந்நீர் சிந்தி நொந்து
போயின
மனம் உருகி வெந்து போயின
நடை பிணம் போல்
நடக்கலாயின
ஏ! நயவஞ்சக மானுட கூட்டமே
நாணயம் அற்ற மூடர்
கூட்டமே
சிறு பிராயம் தொட்டு
சிலாகித்து சிரித்து
மகிழ்ந்து வலம் வந்த
ஜோடி புறாக்களை பிரித்து விட்டீர்களே
அவர்கள் பாவம் உங்களை சும்மா விடுமா
ஏங்கி தவிக்கும் உள்ளங்களின் வலி
உங்களை சபிக்காமல் இருக்குமா
அந்தஸ்த்து எனும் ஆடை அணிந்து
சாதி எனும் சாக்கடையில் குளித்து
போலி கெளரவம் பார்க்கும் கேடுகட்ட சமூகமே
காதலர்களை பிரித்த
காட்டு மிராண்டி கூட்டமே
காலம் ஒரு நாள் மாறும்
சாதிக்கு சமாதி கட்டும் தினம்
அந்தஸ்து ஆயுள் துறந்த
தினம்
மதம் மறுக்கபட்ட தினம்
வருங்காலம் உறக்க சொல்லத்தான் போகிறது.
- பாலு.