ஆசையுள்ள பொம்மைகள்
ஆசையுள்ள பொம்மைகள்.
இந்த வித்தியாசமான முயற்சிக்கு ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன். கதை 'செல் போன்' பயன்பாட்டில் இல்லாத காலம்.
"ரமேஷ், எனக்கு ஆப்டர்நூன்( after noon) பிராக்டிகல் கிளாஸ் இருக்கு ரெண்டு நாளா வீட்ல போன் அவுட் ஆஃப் ஆர்டர் அதனால வீட்டுக்கு இன்ஃபார்ம் பண்ண முடியல, நீ உங்க வீட்டுக்கு போற வழியில் தானே எங்க வீடு, ப்ளீஸ் ஈவினிங் 5'o' கிளாக் மேல தான் நான் வீட்டுக்கு வருவேன்னு எங்க வீட்ல இன்பார்ம் பண்ணிடு... என்ன"
" கண்டிப்பா வைசாலி. நீ வர லேட்டாகும்ன்னு உங்க வீட்ல சொல்லிட்டு தான் எங்க வீட்டுக்கு போவேன், சரி யார் உங்க வீட்ல இருப்பாங்க"
" அம்மா இருக்கறதுக்கு வாய்ப்பு இல்லை. ஏன்னா பாட்டு கிளாஸ் எடுக்க மயிலாப்பூர் போயிடுவாங்க, பார்கவி அக்கா இருப்பா, அவர் கிட்ட சொல்லிடு"
" சரி வைசாலி நான் கிளம்புறேன், சீ யூ.. பை"
------------------
"யாரு, காலிங் பெல் அடிக்கிறது, இதோ வந்துட்டேன் ..."
" என் பெயர் ரமேஷ். வைசாலி கூட காலேஜ்ல படிக்கிறேன். மதியம் வைசாலி பிராக்டிகல் கிலாஸ் இருக்கிறதுனால சாயந்தரம் 5 மணிக்கு மேல தான் வீட்டுக்கு வருவா, இத சொல்லத்தான்"
" அப்படியா, சரி உள்ள வா ரமேஷ், ஐயம் பார்கவி, அட்வகேட்டா பிராக்டிஸ் பண்ணிட்டு இருக்கேன்"
" தேங்க்ஸ்,பரவாயில்லை, இன்னொரு நாள் வரேன்"
" ஒரே காலேஜ்ல படிக்கிறீங்க, ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசையா இருக்கீங்க, இதுக்கெல்லாம் மேல உங்கள வெல்கம் பண்ணலைன்னா வைசாலி என்கிட்ட சண்டைக்கு வந்துடுவா"
" நோ ஃபார்மாலிட்டீஸ் நான் இன்னொரு நாள் வரேன்"
" ஒரு கிளாஸ் மோர் ஆவது குடிச்சிட்டு போனாதான், நான் மட்டுமல்ல உங்க ஃப்ரெண்ட் வைசாலியும் சந்தோஷப்படுவாள்"
" மோர், ரொம்ப டேஸ்டா, வெய்யிலுக்கு இதமா இருந்துச்சு. தேங்ஸ்.."
" நீ என்ன படிக்கிற ரமேஷ்"
" நானும் வைஷாலி கிளாஸ் தான், பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி"
" வீடு"
" இதே ட்ரிப்ளிகேன்,( திருவெல்லிகேனி)
டி.பி.கோயில் ஸ்ட்ரீட்"
" அட, பக்கத்து தெரு தான்"
" அப்ப நான் கிளம்பறேன்"
" அப்பப்ப வீட்டிக்கு வா ரமேஷ்"
" கண்டிப்பா..தேங்ஸ் பர் யுவர் பட்டர் மில்க்"
---------------
" ரொம்ப அழகா இருக்க வைசாலி"
" அப்படியா! தேங்ஸ் "
" தேங்ஸ் மட்டும் தானா"
" வேற என்ன வேனும் என் ரமேஷ் கண்ணாவுக்கு"
" நீ தான் வேனும்"
" ஏய், ரமேஷ், இது பேராசை"
" நீ தான்னா... ஒரே ஒரு....."
" ஒரே ஒரு....."
" சத்தம் இல்லாம ஒரே ஒரு முத்தம்"
" வர, வர நீ ரொம்ப கெட்ட பைனாயிட்ட"
" முத்தம் கேட்டா.. கெட்ட பையனா"
" நீ மொட்டை மாடிக்கு கூப்பிடும் போதே எனக்கு தெரியும்"
" என்ன தெரியும்"
" ஐயா லவ் மூட் இருக்காருன்னு"
" தெரியுது இல்ல, அப்ப என் ஆப்லிகேஷனை ( obligation) புல்பில்( full fill) பண்ண வேண்டியது தானே"
" என்னமோ...டூ வீலர்.. லிப்ட் கேக்கற மாதிரி கேக்கற"
" இன்னைக்கு நீ படு அம்சமா இருக்க, இந்த ஜாலி மூட்ல அப்படியே நீ என்னை கட்டி அணைச்சு ஒரு முத்தம் கொடுத்தா... நான் அப்படியே வானத்துல பறப்பேன்"
" கற்பனை எல்லாம் கொஞ்சம் ஓவரா தான் இருக்கு, நேத்து நைட் வி.சி.ஆர்ல ஏதாவது இங்கிலீஷ் படம் பார்த்தியா"
" வைசாலி, நேரத்தை கடத்தாத, மொட்டை மாடிக்கு உங்க அக்காவோ, அம்மாவோ வருவதுக்கு முன்னாடி, என் இந்த சின்ன ஆசையை நிறைவேத்திடு"
" ரமேஷ், இன்னைக்கு உனக்கு என்ன ஆச்சு, இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிற"
" இதெல்லாம் லவ் என்கிற மகோன்னதம் பன்ற வேலை, காதலின் பரிணாம வளர்ச்சி"
" இப்ப என்ன வேனும் உனக்கு"
" நீ... நீ தான்.. உன்னுடைய முக்கனி இதழின் சாறு.."
" கவிஞரே! ரமேஷ் ஒன்ன நீ நல்லா புரிஞ்சிக்கணும், உன்னை இவ்வளவு
ஃப்ரீடமா எங்க வீட்டு ஆளுங்க அலோ பன்றது எதனால, நம்ம இரண்டு பேரும் கிளாஸ் மேட் என்பதால், அதை நீ எகஸ்பிளாயிட் பண்ண கூடாது."
" நீ சொல்றது எனக்கு புரியல"
" எங்க வீட்ல நீ ரொம்ப நல்ல பையன்னு நம்புறாங்க, அதை நீ அட்வான்டேஜ் எடுத்துக்கலாமா"
" நீ மொதல்ல ஒன்ன புரிஞ்சிக்கணும், நம்ம இரண்டு பேரும் லவ்வரஸ், அதனால தான் இந்த பீடிகை எல்லாம்"
" எனக்கும் உனக்கு ஏற்படற ஆசையெல்லாம் நிறையவே மனசுக்குள் புதைந்து இருக்கு, ஆனா"
" அப்புறம் என்ன, அதை நிறைவேற்றவது தானே நம் கடமை"
" விட்டா, எனக்கு பிள்ளையே கொடுத்திடுவ போல இருக்கே"
" ஒரு முத்தம், ஒரே ஒரு முத்தம் இதுக்கு இவ்வளவு பண்ற"
" இல்ல, ரமேஷ் இன்னைக்கு முத்தத்துல ஆரம்பிச்சு, அது சில நாட்கள்ல வேற மாதிரி முடியும். இப்போதைக்கு நாம் காதலர்கள். காதலிப்போம். எவ்வளவு நேரம் வேணுமுன்னாலும் பேசுவோம். ஆனா இந்த ஸ்பரிச இணை வேண்டாமே. அது காம பாதைக்கு கொண்டு போய்விடும். நம்ம உண்மை காதல் அங்க தோத்து போயிடும்"
" சரி, கிழவி மாதிரி வேதாந்தம் எல்லாம் பேசற, இப்போதைக்கு என் ஆசையெல்லாம் மனசுகுள்ள பூட்டி வச்சுடறேன், நமக்கு கல்யாணம் ஆன பிறகு, அதை நீ சாவி போட்டு திறந்திடு"
" என்ன ரமேஷ் என் மேல கோவமா"
" ஆழமா யோசிச்சு பார்த்த நீ சொல்றது சரின்னு தான் படுது"
" ஐ லவ் யூ ரமேஷ்"
" ஐ டூ வைசாலி"
------------------------------
" வா,ரமேஷ் உள்ள வா"
" வைசாலி...."
" அம்மாவும், வைசாலியும் ஒரு ரிலேசன் வீட்டு பங்ஷனுக்கு போயிருக்காங்க, வருவதுக்கு எப்படியும் சாயிந்திரம் ஆயிடும்"
" அப்படியா, சரி அவ வந்தா இந்த புக்க கொடுத்திடுங்க, நான் அப்ப கிளம்பறேன்"
" ஏன் உடனே ஓடற, வைசாலி மட்டும் தான் உனக்கு பிரண்டா, அப்ப என்கிட்ட எல்லாம் பேச மாட்டீங்களோ"
" அப்படி எல்லாம் ஒன்னும்...."
" என் கிட்டயும் நீ ஃப்ரெண்ட்லியா பேசலாம்"
" சரி, அப்ப கிளம்பறேன்"
" என்ன வந்ததில் இருந்து
கிளம்புறதள்ளியே இருக்கிற, எனக்காக ஒரு காபியாவது சாப்பிட்டு போயேன்"
" இல்ல ... அது வந்து... "
" ஏதாவது அர்ஜென்ட் வர்க் இருக்கா"
" அப்படி எதுவும் இல்ல"
" இன்னைக்கு காலேஜ் லீவு தானே"
" ஆமா"
" உங்க பிரெண்ட்ஸ் கூட ஏதாவது ப்ரோக்ராம் இருக்கா"
" இல்ல"
" அப்ப ஏன் அவசர படற, ஒரு நிமிஷம் இரு சூப்பர் காபி போட்டு தரேன்"
" தேங்கஸ் ,உங்க காபிக்கு"
" எப்படி டேஸ்ட்"
" எக்ஸலன்ட்"
" தேங்ஸ் பர் யுவர் கமெண்ட்ஸ்"
" நீங்க அட்வகேட்டா யாருகிட்ட ஜூனியரா இருக்கீங்க"
" இதே தெருவுல அட்வகேட் விஜயகுமார்னு இருக்கார். அவருகிட்டத்தான் டூ இயர்ஸா
ஜூனியரா வொர்க் பண்றேன்"
"அப்ப நீங்க கோர்ட்ல போய் வாதாடுவிங்களா"
" எஸ், அதானே எங்க தொழில். இது வரைக்கும் மூன்று கேஸ் எனக்கு சார் கொடுத்தாரு, எல்லாமே ஜெயிச்சு காண்பிச்சேன்"
" எனக்கு இந்த கோர்ட்ல நடக்குற காட்சியை நேரடியா பார்க்கனும்னு ஆசை"
" அவ்வளவு தானே கண்டிப்பா ஆழைச்சுட்டு போறேன், ஆனா நீ சினமாவுல பார்க்கிற மாதிரி எல்லாம் காட்சி விறுவிறுப்பா இருக்காது. உண்மையான கோர்ட்டு காட்சி என்பது உனக்கு போரடிச்சுடும்."
" சினிமாவுல காண்பிக்கிற மாதிரி எல்லாம் ஹீட்டிங் ஆர்கியுமெண்ட் இருக்காதா"
" இருக்கும், அந்த மாதிரி , ப்பிரிப்பேர்டு டயலாக்ஸ்க்கு( prepared dialogue எல்லாம் அங்க சாத்தியமில்லை"
"எப்படி இருக்கு உங்க புரோபஷன்"
" ஐ அம் ஃபுல்லி சேடிஸ்பைட், சரி.. நீ என்ன பண்ண போற பி.எஸ்.சி க்கு அப்புறம்"
" பி. ஜீ பண்ண போறேன் . அதுக்கு அப்புறம் தான் ஃப்யூச்சரை பற்றி யோசிக்கனும்"
" தட்ஸ் குட், ஏன் இதுல நீ டாக்டரேட் கூட பண்ணலாமே"
" பண்ணலாம், பார்க்கலாம்"
" அப்ப நான் கிளம்பவா"
" கிளம்பறியா, உங்கிட்ட பேசினதுல டைம் போறதே தெரியல, எனக்காக ஒரு இன்னோரு அரை மணி நேரம்
ஒதுக்கிரியா"
" எனி இம்பார்ட்டெண்ட்"
" ஒன்னுமில்ல, நீ இதே போஸ்ல உட்கார்ந்து இரு, எனக்கு நல்ல மூடல இருக்கும் போது ஏதாவது வரைவேன். இப்ப உன்ன வரைய போறேன். கொஞ்சம் கம்பனி கொடு. பிளீஸ்."
" நீங்க வரைவீங்களா"
" என் ட்ராயிங்ஸ் எல்லாம் நீ பார்க்கல இல்ல"
" நீங்க சொல்லி தான் நீங்க ஒரு ஓவியர்னு தெரியுது"
" நான் என் ஓவியங்கள் எல்லாமே உன்ன வரைந்ததுக்கு அப்பறம் காண்பிக்கிறேன் , நீ கொஞ்சம் ரிலாக்ஸ்டா, அப்படியே உட்கார்ந்து இரு, என்ன..."
" அப்ப என்ன இப்ப நீங்க வரைய போறீங்க"
" ஆமாம், வாட் எ ஹான்சம் பாய் யூ ஆர்"
இருபது நிமிடத்திற்கு பிறகு.....
" ரமேஷ் வா..., வந்து பார்... உன்னை நான் நல்லா வரைந்து இருக்கிறேனான்னு"
"நானா இது, இவ்வளவு அழகாவா நான் இருக்கேன், என்னால நம்பவே முடியில, என்னோட படம்னு சொல்லல, பென்டாஸ்டிக்கா வரைந்து இருக்கீங்க, ரியலி சூப்பர்"
" தேங்ஸ் ரமேஷ்"
" இந்த படம் எனக்கு கிடைக்குமா"
"கண்டிப்பா தரேன் இப்ப இல்ல, ஒரு வாரம் கழிச்சு"
" ஏன் ஒரு வாரம் கழிச்சு"
" என்னுடைய ட்ராயிங்ஸ் நான் வரைந்த அப்புறம் நிறைய கரக்சன் பண்ணுவேன். நிறைய நானே அதை பார்த்து, பார்த்து ரசிப்பேன்."
" இப்ப இந்த படத்துல ஏதாவது கரக்சன் இருக்கா"
" உண்மைய சொல்லவா"
" என்ன உண்மை"
" நீ ஒரு பேரழகன், உன் படத்தை எப்படி கரக்சன் பண்றது"
" நீங்க வேற நான் ஒரு சாதாரன..."
" நோ..நோ.. யு ஆர் ரியலி ஹாண்ட்சம்"
" நீங்க என்ன கிண்டல் பண்றீங்களா"
" பீ சீரியஸ், ஐ சே, ஒரு உண்மையை சொல்லவா... உன்னை வரையும் போது உன்னை நான் உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்"
" ..............."
" என்ன ஆப் ஆயிட்ட"
" ........."
" நான் உன்னை காதலிக்கிறேன்"
" நீங்க...என்ன... சொல்றீங்க...பா.."
" எஸ் என் பெயர் பார்கவி, உன்னை விட நான் வயசுல பெரியவ தான், பட் லவ்வுக்கு ஏது வயசு"
" நான் கிளம்பறேன்"
" நீ கிளம்பு, என் லவ்வ நீ அக்சப்ட் பண்றியான்னு எங்கிட்ட சொல்லியே ஆகனும், அவசரம் இல்ல, டேக் யுவர் ஓன் டேயம். ஐ லவ் யூ. பை, டேக் கேர் ."
---------------
" ரமேஷ்... நில்லு ரமேஷ் ஏன் ஒரு வாரமா காலேஜ் விட்ட உடனே வீட்டுக்கு ஓடிடற.... கேண்டீன்ல ஆள பார்க்கவே முடியில, கிளாஸ்ல உன் வழக்கமான சேட்டைகள் எதுவுமே இல்லை, என்ன ஆச்சு உனக்கு..
என் கிட்ட கூட கடமைக்கு தான் பேசற .. என்ன பிரச்சனை உனக்கு.."
" ஒன்னும் இல்லையே வைசாலி ..நான் நல்லாதான் இருக்கேன்"
" இல்ல.. பழைய ரமேஷ் மாதிரி ஜாலியா இல்ல.. உங்கிட்ட இந்த ஒரு வாரமா ஏதோ மாற்றம் இருக்கு"
" இல்ல, வைசாலி, நான் எப்போதும் போல தான் இருக்கேன்"
" பொய் சொல்ற, உன்னுடைய சிரிச்ச முகம், இந்த ஒரு வாரமா உம்மனா மூஞ்சியாட்டம் முகத்தை வச்சுகிற, ஏன் என்ன ஆச்சு, மனசுகுள்ள ஏதொ ஒரு பிரச்சனை உனக்குள் இருக்கு, என்ன அது, என் கிட்ட கூட சொல்ல மாட்டியா"
" வைசாலி, நான்... நல்லா தான்..."
" ஏன் ரமேஷ் பொய் சொல்ற.. என் கண்ண பார்த்து சொல்ல, உனக்கு எந்த பிரச்சனையும் இல்லன்னு"
" சாயந்திரம், மயிலாபூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வா"
" ஏன்"
" நீ வாயேன்"
" ஏன் ரமேஷ் இப்படி படுத்துற"
" நீ அங்க வருவியா.. வரமாட்டியா"
" கண்டிப்பா வரேன்"
-------------------
" நீ எப்ப வந்த ரமேஷ்
" நான் வந்து பத்து நிமிஷம் ஆச்சு"
" வா அப்படி மண்டபத்து பக்கம் போய் பேசுவோம்"
" நீ சொல்றதும் சரி தான்"
" இப்ப சொல்லு உனக்கு என்ன பிரச்சனை"
" நான் யாரு"
" ரமேஷ்"
" உனக்கு நான் யாரு"
" என்னுடைய லவ்வர்"
" அது தான் இப்ப பிரச்சனை"
" உங்க வீட்ல தெரிந்து போச்சா"
" நம்ம காதல் உங்க வீட்லையும், எங்க வீட்லையும் தெரிய வந்து இருந்தா ரொம்ப சந்தோஷபட்டு இருப்பேன்"
" ஏன்"
" பின்ன, நாம காதலிக்கிறது எப்படியும் ஒரு நாள் தெரிய தானே வரும், ஆனா அது மாதிரி எதுவும் நடக்கில"
" பின்ன வேற என்ன பிரச்சனை"
" போன வாரம் ஒரு மதியம் உங்க வீட்டுக்கு வந்திருந்தேன் , அப்போ நீயும் உன் அம்மாவும் எங்கியோ உங்க ரிலேஷன் பங்ஷனுக்கு போயிருந்தீங்க"
" ஆமா, பார்கவி நீ வந்ததை சொன்னாளே"
" வேற என்ன சொன்னா"
" உன்ன உட்கார வச்சு வரைந்த படத்தை என்கிட்ட காண்பித்தாள்"
" அப்புறம் வேற என்ன சொன்னாங்க பார்கவி"
" விழுப்புரம்னு சொன்னா"
" பீ சீரியஸ் வைசாலி"
" வேற எதுவும் உன்ன பத்தி அவ எங்கிட்ட சொல்லலியே"
" அன்னைக்கு எங்கிட்ட சொன்னாங்களே"
" என்ன சொன்னா பார்கவி"
" ............."
" சொல்லு ரமேஷ் என்ன தான் அப்படி தப்பா சொன்னா பார்கவி"
" ..........."
" இப்ப சொல்ல போறியா.. இல்ல நான் கிளம்பவா"
" பார்கவி..."
" பார்கவி... என்னை லவ் பண்றாங்களாம்"
" ............."
" நான் அதுக்கு பதில் ஏதும் சொல்லல"
".........."
" அவங்க காதலை நான் ஒத்துகிறேனா இல்லையான்னு முடிவு சொல்ல சொல்லியிருக்காங்க"
" ..........."
" நீ ஏன் கண் கலங்குற... வைசாலி ... கமான்"
" ........."
" அழாத வைசாலி... யாராவது பார்த்தா தப்பா எடுத்துக்க போறாங்க"
" பின்ன அழாம என்ன செய்ய சொல்ற"
" இதுல அழறதுக்கு ஒன்னும் இல்ல"
" என் இடதுல இருந்து பார் உனக்கு புரியும்"
" அதே மாதிரி தான் என் இடத்துல இருந்து நீ பார் வைசாலி "
" ஏன் அப்படி சொன்னா"
" அவங்களுக்கு என்னை பிடிச்சிருக்கு அதனால சொன்னாங்க"
" ரமேஷ், அவ உன்னை விட நாலு வயசு பெரியவ"
" காதலுக்கு கண்ணு இல்ல வைசாலி"
" நீ அவளுக்கு என்ன சொல்ல போற"
" பார்கவிக்கு பச்சை கொடி காட்ட போறேன்"
" உன்னை கொன்னே போட்டுடுவேன"
" சும்மா விளையாட்டுக்கு சொன்னேன், என்ன செய்யலாம்...நீயே இதுக்கு ஒரு தீர்வு சொல்லேன்"
" நம்ம இரண்டு பேரும் லவ் பண்றத ஓபானா அவ கிட்ட சொல்லிடுவோம்"
" நல்ல ஐடியா, ஆனா அதுக்கு அப்புறம் உங்க வீட்டுக்கு நான் இப்ப வர மாதிரி ஃப்ரீயா வர முடியாது"
" அது பராவாயில்லை, அவ மனசுல ஆசையை வீணா வளர்க்க வைக்கிறது நமக்கும் நல்லது அல்ல, அவளுக்கும் நல்லது கிடையாது"
" எப்ப அவங்க கிட்ட சொல்லலாம்"
" இதே கோயில்ல வச்சு சொல்லலாம்னா அவ கோயிலுக்கு எல்லாம் வர மாட்டா"
" ஏன்"
" அவளுக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமா கிடையாது"
" அப்ப அவங்க நாத்திகரா"
" உனக்கு தெரியாதா, மூடநம்பிக்கையை பற்றி நிறைய அவ எழுதின ஆர்ட்டிகல்ஸ் லீடிங் நியூஸ் பேப்பர்ஸ்ல வந்திருக்கே, நீ படிச்சது இல்லையா"
" ஏதாவது புனைப்பெயர்ல எழுதறாங்களா"
"இயற்கை விரும்பி" என்ற பெயர்ல
எழுதரா"
" அது, அவங்க தானா."
" அது மட்டும் இல்ல, உனக்கு விஷயம் தெரியுமோ, எங்கம்மா பிராமின், எங்கப்பா நான்- பிராமின். அப்பவே இரண்டு தாத்தாவும் காந்தியவாதிகள். நல்ல நண்பர்கள். ஜாதி பார்க்காம எங்கம்மாவையும், அப்பாவையும் சேர்த்து வச்சுட்டாங்க. எங்கப்பா சாமியே கும்மிட மாட்டார். எங்கம்மா பயங்கிர பக்தி உள்ளவங்க. எங்கப்பா மாதிரி பார்கவி. எங்கம்மா மாதிரி நான்.
" அப்ப எங்க வச்சு பார்கவி கிட்ட பேசலாம்"
" எங்க வீட்டு மொட்டை மாடியிலேயே பேசலாம்"
" அதுசரி வைசாலி, ஏன் பார்கவிக்கு நீங்க இன்னும் வரன் பார்க்காம இருகீங்க"
" உனக்கு தெரியுமா"
" என்ன சொல்ற, புரியில"
" எங்கம்மா இதுவரைக்கும் கிட்டதட்ட இருபத்தி அஞ்சு மாப்பிள்ளையாவது எங்க வீட்டுக்கு வர சொல்லி பார்கவிய கல்யாணத்துகாக பார்த்துவிட்டு போயிருப்பாங்க"
" அப்ப ஏன் அவங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகல, ஏதாவது தோஷம்.."
" வந்த அத்தனை மாப்பிள்ளை பையன்களையும் ஓட விட்டது அவ தான்"
" ஓட விட்டாங்களா"
" ஆமா, பொண்ணு பார்க்க வர்றவங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்னு சொல்லுவா, அவ என்ன பேசுவாளோ... அடுத்த நொடியே இவளை பொண்ணு பார்க்க வந்த பயலுக ஓடியே போயிடுவாங்க"
" அப்படி என்ன தான் பேசுவாங்க"
" புரட்சி தான்"
" புரட்சின்னா"
" தோ பாரு மாப்பிள்ளை பையா, கல்யாணம் ஆனா நாம தனி குடித்தனம் தான் நடத்துனும், சாமி கும்மிட மாட்டேன், சமையல் நான் ஒரு நாள் செய்தா, நீ ஒரு நாள் செய்யனும். எப்படி வேண்ணா டிரஸ் பண்ணுவேன். என் சுதந்திரத்துல தலையிடக்கூடாது. நகை ஒரு தம்பிடி கூட எங்க வீட்ல இருந்து எதிர் பார்க்க கூடாது. குடும்ப விஷயம் எதுவா இருந்திலும் நம்ம இரண்டு பேர் முடிவு தான் இறுதியா இருக்கனும். அன்பா இருப்பேன். எங்கேயாவது ஆண் ஆதிக்கம் தெரிஞ்சா, அடுத்த நிமிஷம் டைவர்ஸ் தான். இப்படி பல கண்டிஷன் போட்டா எந்த பைய இவள கல்யாணம் கட்டுவான்"
" வெரி இன்ட்ரஸ்டிங் கேரக்டர்"
" அவ சொல்றது நடைமுறைக்கு சாத்தியபடுமா"
" இவ்வளவு கண்டிஷனா இருக்கிறவங்க
எப்படி என்னை லவ் பண்றேன்னு சொன்னாங்க"
" அதான் எனக்கும் புரியல"
" அது மட்டுமா சொன்னாங்க"
" என்ன சொன்னா அப்படி உன்ன".
" நீ ஒரு பேரழகன், அப்படின்னு சொன்னாங்க"
" ரொம்ப தான்"
" நான் பேரழகன் இல்லையா"
" நீ பேரழகன் தான். ஆனா நீ எனக்கு மட்டும் தான் சொந்தம்.
---------------
" நீங்க இரண்டு பேரும் நல்ல பிரெண்ட்ஸ்ன்னு தான் இவ்வளவு நாள் நினைச்சேன், ஆனா இரண்டு பேரும் ஓபனா காதலை ஒத்துகிட்டதுல உங்க காதலை நம்பறேன். இது தெரியாம ரமேஷ்கிட்ட லவ் பண்றதா நான் வேற சொல்லிட்டேன். சாரி ரமேஷ். நான் உங்கிட்ட என் காதலை சொன்ன அந்த நிமிடமே, இல்லை பார்கவி, நான் உங்க தங்கை வைசாலிய காதலிக்கிறேன்னு சொல்லியிருந்தா நல்லா இருந்திருக்கும். ஓ.கே. இட்ஸ் ஆல் இந்த கேம். உங்க லவ்ல உறுதியா இருங்க. ஆல் தி பெஸ்ட்"
----------------------
"ரமேஷ் ஒரு வாரம் ஊர்ல இருக்க மாட்டேன்"
" ஏன்"
" ஸ்ரீரங்கம் போகிறேன்"
" என்ன ஏதாவது விஷேசமா"
" ஆமா, என்னோட தாய் மாமா பையனுக்கு கல்யாணம்"
" ஏன், உங்க கூட பார்கவி வரலியா"
" அவ எந்த ரிலேஷன் கூடவும் ஒட்ட மாட்டா"
" இதுலயும் அவங்க டிஃபரண்ட்டா"
" அவ அப்படி தான்"
" சரி பத்திரமா போயிட்டு வா"
" பிராக்டிகல் கிளாஸ் ஒரு வாரம் மிஸ் பண்றேன். உன்ன ஒரு வாரம் மிஸ் பண்றேன்"
" என்ன பண்ண முடியும். இது மாதிரி குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தான் ரொம்ப ஜாலியா இருக்குமே"
" அப்படியா, ரொம்ப நாளாச்சு ஸ்ரீரங்கம் போயி, அதே மாதிரி சொந்தக்கார பார்த்தும் ரொம்ப நாளாச்சு"
" போயிட்டு வா சேஞ்சு ஆப் சுச்சுவேஷன், கண்டிப்பா தேவை"
-------------
" என்ன இது இப்படி பேய் மழை பெய்யுது, அதுவும் வைசாலி வீட்டு கிட்ட வரும் போது, போயிடலாமா நம்ம வீட்டுக்கு, காத்து தூக்கிடும் போல இருக்கே, டிவி வேற பாக்கல, புயல் ஏதாவது உருவாயிருக்கா, இதுக்கு மேல யோசிக்க முடியாது, வைசாலி விட்டு வாசல்ல நிப்போம். அட வீட்ல பார்கவி இருக்காங்க போல இருக்கு.காலிங் பெல் அழுத்துவோமா, வேணாம் வாசல்லையே நிப்போம். மழை சுத்தி, சுத்தி அடிக்குதே, முழுக்க நெனச்சுட்டேனே. குளிருது. எவ்வளவு வெய்யில் அடிச்சாலும் அட்ஜஸ்ட் பண்ணி போயிடலாம், ஆனா மழையில ஒரு வேலையும் ஓடாது. சரி காலிங் பெல் அழுத்துவோம்."
" யாரு... நல்ல மழையில யாரு காலிங் பெல் அடிக்கிறது"
" நான் தான் ரமேஷ்ஷ்....."
" ரமேஷ், கதவு திறந்து தானே இருக்கு, நீ நேரா உள்ள வர வேண்டியது தானே"
" மழை விட்டுவிடும் என்று"
" இது இப்ப விடாது, வங்க கடல்ல புயல் சின்னம் உருவாய் இருக்காம்"
" நினைச்சேன், நீங்க சொல்லிடீங்க"
" இப்படி மழையில் நனைந்துட்டியே, இந்தா டவல் தலையை நல்லா துடைச்சுக்கோ"
" தேங்க்ஸ்"
" என்ன ரமேஷ் உன் டிரஸ் ஃபுல்லா மழையில நல்லா நனைச்சிடுச்சு, ஒரு நிமிஷம் இரு வரேன்"
"அது ஒன்னுமில்லை, ஈரம் கொஞ்ச நேரத்துல காய்ந்துவிடும்"
" இந்த பிடி ஆபத்துக்கு பாவம் இல்ல, இது என்னோட டி- சர்ட். இது வேட்டி. எப்படி பொம்பளைங்க இருக்கிற வீட்ல வேட்டின்னு கேட்டுடாதே, உன் அருமை காதலி வைசாலி பேன்சி டிரஸ் காம்படிஷன்ல கலந்துக்கும் போது வாங்கினது, பாத்துரூம்ல போய் இந்த வேட்டி, டி- சர்ட் மாத்திட்டு வந்திடு"
" ரொம்ப தேங்ஸ்"
" தேங்ஸ் எல்லாம் அப்புறம், மொதல்ல டிரஸ் மாத்திட்டு வா, சூடா காபி போட்டு தரேன், கொஞ்சம் உன் குளிர் அடங்கும்."
" ஆ .... அம்மா......."
" ரமேஷ் என்ன என்னாச்சு"
" வழுக்கி விழுத்துட்டேன்"
" மெதுவா எழுந்திரு"
" பாசையை கிளீன் பண்ணாதது எங்க தப்பு தான், நீ வழுக்கி விழுந்ததுக்கு அது தான் காரணம், சாரி, நான் உட்கார நீ என் தோள்பட்டை மேல் உன் கை போட்டு கெட்டியா பிடிச்சுக்கோ, உன் இடுப்பை நான் படிச்சுகிறேன், இப்ப மெதுவா எழுந்திரு, அப்படி தான் , எஸ் அப்படி தான் , நிக்க முடியுதா... அப்படியே மெதுவா நட, முடியலையா, அடி மேல அடி ஊனி வை, வலிக்குதா, மெதுவா.. எஸ்... குட்... அப்படி தான்... இந்த சோபாவுல ரிலாக்ஸா உட்கார், பெயின் கில்லர் ஆயின்மென்ட் கட்டிப்பா அம்மா வச்சிருபாங்க"
" உங்களுக்கு மிக பெரிய சிரமத்தை கொடுத்துட்டேன்"
" உன் ஃபேண்ட கழட்டு, இந்த டவலை கட்டிகோ, அப்ப தான் இந்த ஆயின்மென்ட் உன் அடிபட்ட கால்ல அப்ளை பண்ண முடியும்"
" ஆ... பெயின் தாங்க முடியில"
" கஷ்டபட்டு உன் பேண்ட கழட்டு, அதுகுள்ள நான் போயி கொஞ்சம் காபி போட்டு எடுத்து வரேன், அது கொஞ்சம் உனக்கு எனர்ஜி தரும், இந்த கிளைமேட்க்கு நல்லா இருக்கும்"
" சரிங்க.."
" இந்தா காபியை குடி ரமேஷ்"
'" உண்மையிலேயே காபி நல்ல எனர்ஜி தருது"
" லெப்ட் லெக்( left leg) தானே வலிக்குது"
" ஆமா"
" அப்படியே அந்த லெப்ட் லெக்கை சோபாவுல நீட்டி வை, அப்ப தான் என்னால ஆயின்மென்ட் வலிக்கிற இடத்துல நல்லா அப்ளை பண்ண முடியும்"
" உங்களுக்கு சிரமம் வேனாம், கொடுங்க நானே அப்ளை பண்ணிக்கிறேன். "
" நீ கொஞ்ச நேரம் கம்முனு இரு, அப்படியே ரிலாக்ஸா படு.. எங்க காட்டு முட்டியில் இருந்து தானே வலிக்குது."
" ஆ.. அங்க தான்.. ஆழுத்தாதீங்க..ஆ.. வலிக்குது.."
" இப்படி என் கையை கெட்டியா பிடிச்சா எப்படி மருந்த தடவரது"
" ..............."
" ரமேஷ், வாட் யூ ஆர் டூயிங்"
" ............'"
" ரமேஷ், வேனாம்..வேனா.. வே... ம்ம்ம்.."
--------------
இரண்டு நாள் கழித்து.
" சாரி"
" சாரி எல்லாம் எதுக்கு, இரண்டு பேரும் சூழ்நிலை கைதி ஆகிவிட்டோம்"
" எனக்கு ஏன் அந்த மாதிரி புத்தி திடீர்னு"
" உன் மேல மட்டும் தப்பு இல்ல, என் கிட்டயும் தப்பு நிறையவே, இல்லைன்னா அது நடந்திருக்காது"
" இதுக்கு பிராயசித்தம்"
" பிராக்டிகலா சொன்னா, நீ என் தங்கையை லவ் பண்ணலைன்னா, இந்த மாதிரி நடந்ததுக்கு உன்னை கல்யாணம் பண்ணிப்பேன், ஆனா இப்ப என்ன செய்யறதுன்னு தெரியல"
" நான் வைசாலிக்கு துரோகம் பண்ணிட்டேன்"
" அப்ப நான் என் தங்கைக்கு துரோகம் பண்ணிட்டேனா... இது நடந்ததுக்கு நம்ம இருவரோட சூழ்நிலை தான் காரணம், வயசு, ஆழ்மனதோட ஆசை, ஸ்பரிச நெருக்கம், ஹார்மோன்களின் எழுச்சி, ஆண்- பெண் அடிப்படை உடல் கவர்ச்சி, தனிமை தந்த தைரியம், உரிமை மீறல், இயற்கையான மனித ஆண் - பெண் கூடல்"
" நீங்க எவ்வளவு தான் விளக்கம் சொன்னாலும், சில நிமிடம் என்னை நான் மறந்தவிட்டேன்"
" காமத்தை கடந்து விடு- ஓசோ.,
நாம காமத்தை கடந்துட்டோம், எப்படி கடக்கறது , அதை அனுபவிச்சா தான் கடக்க முடியும், இப்ப ஒரு தெளிவு வருது இல்ல"
" நீங்க எளிமையா சொல்லிட்டீங்க, என்னால அவ்வளவு எளிதா அந்த சம்பவத்தை கடக்க முடியில, நான் தப்பு பண்ணிட்டேன். எனக்கு குற்ற உணர்வு அதிகமாகுது"
" ஆழமா யோசிச்சா இதுல தப்பு ஒன்னுமே இல்ல, காரணம் இரண்டு பேர் சம்மதத்தோட நடந்தேறிய சம்பவம், நீ சம காலத்துல கட்டமைக்கபட்ட நாகரீகத்தை வச்சி ரொம்பவே பயப்படுற"
" சந்தர்பமும் சூழ்நிலையும் சில சிமயம் இப்படி தான் அமையும், அந்த சூழ்நிலையோட கதாபாத்திரங்கள் தான் நாம் இருவரும்"
" அப்ப நான் செய்த காரியம் தப்பு இல்லையா"
" இந்த ஒரு அனுபவத்தை நாம பாடமா எடுத்தக்கனும், அவ்வளவு தான்"
" உங்களுக்கு என் மேல கோபம் இல்லையா"
" துளி கூட இல்லை, காரணம் நானும் தானே இதுல உடன் பட்டேன்"
" உங்களுக்கு குற்ற உணர்வு ஏற்படவில்லையா"
" இது அடிப்படை மனித இயல்பு, அந்த நிகழ்வின் காரணம் நாம இருவரும் வாலிப விருந்தில் கலந்து கொண்ட காம சுவை அறிப்படாத, காம சுவையை அறிய துடித்த மானுட பதர்கள்"
" இதை உங்க தங்கை கிட்ட ..."
" இது மறைக்கபட வேண்டிய விஷயம். இது கிணற்றில் போட்ட கல் மாதிரி. "
" எனக்கு மனசாட்சி குத்துது"
" மனசாட்சி மட்டும் தான் அந்த நடந்த சம்பவத்துக்கு சாட்சி"
" நீங்க இதை இவ்வளவு எளிதா.."
" எல்லா விஷயத்தையும் நியாய படுத்த முடியாது, இது ஏற குறைய விபத்து தான், அதனால ஞாய படுத்தலாம்"
" அப்ப இதை கெட்ட கனவா நினைச்சி மறந்திடவா"
" மீண்டும் சொல்றேன் நடந்தது தப்பே இல்லை. இங்க வரையறுக்கப்பட்ட சமூக போலியான கட்டுகோப்பு தான் உன்னை இப்படி பேச வைக்குது, இன்னொரு தடவை அதே மாதிரி உறவுக்கு நாம உடன் பட்டா அது தான் மிகப்பெரிய தவறு. காரணம் நீ என் தங்கையை காதலிக்கிற"
" எனக்காக நீங்க ரொம்ப தைரியமா பேசற மாதிரி... அப்படி எதுவும்..."
" ரமேஷ் இந்த சமூகம் நிறைய ஆசையை அடக்க சொல்லுது. காரணம் குடும்பம் என்ற கோட்பாடு. ஆனா ஆசையையோ, கோபத்தையோ ரொம்ப நாள் அடக்க முடியாது. நான் சொல்றது உனக்கு புரியுதா"
" ஓரளவு புரியுது. தெளிவு வருது, நான் கிளம்பறேன்"
" நாம எல்லோரும் பெரும்பாலும் எல்லா விஷயங்களையும் மனதால அணுகறோம். அதனால தான் சோகம், ஏமாற்றம், பதட்டம் எல்லாமே. மூளையை கொண்டு அணுகினோம்னா, எதுவுமே தெளிவா இருக்கும். பதட்டமே ஏற்படாது.
ஏன்னா நம்ம மனித மூளை ரொம்ப சாமார்த்தியசாலி. ஏன்னா மனித மூளை யோசிட்டே இருக்கும். எப்பவும் fresh ஆ இருக்கும், அதனால தான் காலையில வேனும்னு சொல்லும், மாலையில வேண்டாம்னு சொல்லும்.Humam brain is very tricky."
" எனக்கு நீங்க சொல்றது ஓரளவு தான் புரியுது. ஆனா உங்க தங்கையை நினைக்கும் போது, குற்ற உணர்வு மேலோங்குது"
" ரமேஷ் திரும்பவும் சொல்றேன், சில விஷயங்கள் கண்டிப்பா மறக்க பட வேண்டியவை. Please try to forget that incident."
------------------------
- பாலு.