இரவு💕
இரவு💕
நிலவே நீ
நீல வான நீச்சல் குளத்தில் நீந்தியது போதும்.
எழில் நிலவே
எழுந்து வா
மிகவும் குளிர் இருந்தால்
அந்த வென் மேகத்தை
எடுத்து போர்த்தி கொள்.
ரொம்பவே சிரிக்கும்
நட்சத்திர கூட்டமே
என்னவள் சரிப்புக்கு
நீங்கள் எம்மாத்திரம்.
கண்களால் கவிதை சொல்லும்
இளம் பாவையே வா
உன் சிங்கார
சிரிப்பை
கொஞ்சம்
அவிழ்த்து விடு
அந்த நட்சத்திர கூட்டம்
அவ்வியம் அடையும்.
என் அழகிய இளவரசியே
அந்த நிலவிடம்
நேரடியாக கேட்கவா
நீ அழகியா
அல்லது வென்னிலவா என்று.
எங்கே அந்த நிலவை
காணவில்லை
உன் எழில் வடிவத்தை
கண்டு நாணி
கரு மேகத்திடையே மறைந்து கொண்டது.
என் எதிரில் நிற்கும்
சொர்கமே
உன் விழி இரண்டும்
வில் வித்தை செய்கிறது
உன் பார்வை என்னுள் அம்பாக பாய்கிறது
காதல் ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது
உரிமை மீறல் நடக்கிறது
உன் ஒடியும் இடையை
பத்திரமாக பிடிக்கிறது
நான்கு கண்கள் துடிக்கின்றது
இதயம் இனைகிறது
இறுக்க அனைக்கிறது
இதழ்கள் நனைகிறது
பரவசம் அடைகிறது
இன்னிசை பிறக்கிறது
பெண்மை பூக்கின்றது
ஆன்மை ஆளுமை செய்கிறது.
-பாலு.