தனிமை
![](https://eluthu.com/images/loading.gif)
பாலைவனத்திலும் பூக்களுண்டு
பாவை அணைத்திடும் பணியுமுண்டு
முள்ளுடை கள்ளிக்கும் கனிகளுண்டு
கல்லுடை மனதிற்கும் காதலுண்டு
காவிரி காண மறுப்பதினால் காய்ந்தவையெல்லாம் பாலைவனம் தான்
கனகம் தேடும் காளையரில் காண்பவையெல்லாம் காமமடி
குனகம் பாரும் உலகினிலே
நானும் யாருமற்ற நரகத்திலே...
தனிமைச் சுடும் போதினிலே
கவிதை தந்த ஆதரவில்
கவலை மறந்து போகிறேனே....