நாம் யார், இறைவன் யார் அறிந்திடுவோமா

இன்றே நம்முள் அலைந்து திரியும்
ஒன்றாம் அகந்தையைக் கட்டிப்பிடித்து
வெளிக்கொணர்வோம் அழித்திடுவோம் அதை வேரோடு
நம்முள் நம்மைக் காண்போம் ஆம் நம்ஆன்மாவை
நாம் நம் உடலன்று அதில் உறையும் ஆன்மா
அதற்குள் இருந்து நம்மை இயக்குகின்றான் இறைவன்
அந்த இறைவனுக்கே நாம் எல்லாம் என்றும் அடிமை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (16-Jan-24, 1:19 pm)
பார்வை : 129

மேலே