பொங்கல் பண்டிகைமூன்றாம் நாள்மாட்டுப்பொங்கல்

இன்று பொங்கல் பண்டிகை : நாள் மூன்று

இந்நாள் உழவர் பெருமக்கள் தங்கள் மனைகளில்
வளர்த்திடும் காளைகளுக்கு, பசுவிற்கு அர்பணிப்பர்
ஆம், அன்றெல்லாம், :ட்ராக்டர்கள்" வாராத நாட்களிலே
உள்ளவர்க்கு உழுகலப்பையும் காளையுமே எல்லாம்
ஆதவன் உதிக்கும் முன்னே ஏறுப்பூட்டி கலப்பையும்
கையுமாய் தங்கள் நிலங்களுக்கு சென்றிடுவார்
உழுவார் உழவர் உழுவதற்கே காலைமுதல்
பகலவன் மேற்கே மறையும் வரை.....
இவர்களுக்கு, இவர்கள் காளையே பெரும் நண்பராம்
இவற்றுடன் பேசிக் கொண்டே செல்லும் உலாவரும் உண்டு
இத்தனையேன்....இவை இவர்வீட்டின் செல்லப் பிள்ளையாம்

பொங்கல் திருநாளின் இரண்டாம் நாள் முற்றும் முற்றும்
உழவர் மாடுகளுக்கே அர்ப்பணிக்கும் நன்னாள்
இன்று இவற்றிற்கு நீராட்டி, உடலில் ஆடையும் ஏற்றி
கொம்புகளுக்கு வண்ண பூச்சும் தந்து...நல்லுணவும் படைத்து
அந்திமயங்கும் முன்னே வீதி வீதியாய் ஒட்டிச் செல்வர்
ஆடிப் பாடி மகிழ்வர். மாட்டுடம் மாட்டாய் ஒன்றியே
உலகிலேயே மாட்டிற்கும் விழா நடத்தி அதையும்
மனிதரைப்போல் நடத்தும் உயர்குலம் நம் உழவர்குலம் ஒன்றே

வாழ்க நம்மை வாழவைக்கும் உழவர் பெருமக்கள்
வாழ்க வாழ்கவே அவர்கள் காளைகளும், பசுக்களும்
நாட்டின் சுபீட்சம் இவர்கள் கையிலே இருப்பது அறி

வாழ்க எந்நாளும் நம் தமிழர் கலாச்சாரம் , விருந்தோம்பல்
வாழ்க எல்லா இன்பமும் பொங்க நம்தமிழர்
இவர்கள் எங்கிருந்தாலும் என்றுமே இறைவன் அருளால்
பல்லாண்டு வாழ்கவே சீரும் சிறப்புமாய் உள்ளவர்கள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (16-Jan-24, 12:58 pm)
பார்வை : 18

மேலே