பொங்கல் பண்டிகைஇரண்டாம் நாள்பொங்கல்

பொங்கல் திருநாள்
---------------------------

நாள் 2 : இன்று பொங்கல்
---------------------------

தைத் தை தை தித்தி தை
தை....தா..தைதை. தா
தடுங்கின தோம் தை தை

என்றே ஜதிபாடி ஆடி வருகின்றாள்
அதோ பார் எங்கள் தமிழர் தைமாதமாம்
எழில் மாது இன்று புதுவருட முதல்
பண்டிகை தைம்முதல் தேதியில் வரும்
தமிழருக்கே உரித்தான பொங்கல் பண்டிகை
எழுந்திரு...ஆனந்தமாய் இந்நாளைக்
கொண்டாடுகவே என்று பறை சாற்றி
எழுப்பி ஊக்குவித்தாள் தைமாது...

இல்லமெல்லாம் குதுகூலம் சேர்த்திட்டாள்
எல்லா நலமும் கூட செல்வம் செழிக்க

அதோ அங்கே எங்கள் இல்லத்து முற்றத்தில்
அம்மா வந்துவிட்டாங்க... கூடவே அக்கா, தங்கை தம்பியரும்
எங்கள் இனிய அப்பாவும் .......
சுத்தம் செய்யப்பட்ட இடத்தில் அம்மா
கோலம் இட்டு பூவும் வைத்தால்...கூடவே
மஞ்சள் பொடியில் ஒரு பிள்ளையாரையும்
செய்து மூலையில் ரட்சகனாய் வைத்தாள்

அதோ அப்பா..ஐந்து முற்றிய கருங்கரும்பில்
முக்கோண பந்தல் ஒன்று அமைத்து கொடுக்க
அதன் அடியில் செங்கல்லால் அம்மா ஒரு
விறகடுப்பு தயார் செய்தார்...பின்னே
அழகான புது வெண்கலப் பானைக்கு
மங்கள மஞ்சள் கிழங்கும் இலையும் கொண்டு
அதற்கு கழுத்தில் தோரணம் கட்டி..குங்குமம் இட்டார்
பின்னே புது அரிசி களைந்து பசும்பாலும் சேர்த்து
கலத்தில் இட்டார்....இப்போது கொழுந்துவிடும் தீயில்
கலத்தில் இட்டவை கொத்தித்து.....பொங்கிட
கலத்தை அம்மா கொஞ்சம் சாய்த்திட பொங்கிவழிந்தது
பாலும்.....பொங்கலோ பொங்கல்...கரகோஷம்
வீட்டின் கூரையை முட்டியது....மேல் சாளரம் வழியே
ஆதவன் எங்கள் பொங்கல் பானையில் கிரணம்
பரப்பி ஆசீர்வதிக்க....மீண்டும் பொங்கலோ பொங்கல்
கரகோஷம்....நாங்கள் எழுப்ப....
எல்லோரும் எம்மை வாழவைக்கும் சூரிய நாரணனுக்கு
வந்தனம் கோடி செலுத்தி நன்றி சொன்னோம்..

இதோ அம்மா.பொங்கல் கலத்தில் வெல்லமும், நெய்யும்
முந்திரி, திராக்ஷை, நல்ல ஏலக்காய், மற்றும் குங்குமப்பூ
சேர்த்து கிளறி....நெய் ஒழுகும் சர்க்கரைப் பொங்கல்
செய்து முடித்து.....சூரிய தேவனுக்கு படைக்க ..
மீண்டும் நாங்கள் கும்பிட்டோம்....

வீட்டில் தை நங்கை ஆடி முடித்து பொங்கலும்
ஏற்றாள்....எங்கள் இல்லம் முழுக்க குதுகூலத்தில்
அம்மா கையால் பொங்கல் கொடுத்தாள்..உண்டோம்
மகிழ்ந்தோம்...தந்தையும் ஆசீர்வதிக்க

பொங்கலோ பொங்கல்...எங்கும் மங்களம் பொங்குகவே

தை தை தித்தி தை......தை முதல் நாள்
தமிழருக்கு தனித்த திருநாள் ....பொங்கல் திருநாள்
இனிய பொங்கல் திருவிழாவின் இரண்டாம் நாள்..



.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (15-Jan-24, 1:48 pm)
பார்வை : 39

மேலே