என்னவளை காண

காலங்கள் , பருவங்கள், வருடங்கள் வாழ்கை;
பார்வை எண்ணம், செயல் நிகழ்வு;
இன்பம் துன்பம், ஏற்றம் இறக்கம்;
பிள்ளைகள் பேரன்கள் , பொறுப்புகள் கடமைகள்;

நிறைவு குறைவு வாழ்க்கை யானது.
சந்திக்க ஒரு துணை இருந்தது ,
சிந்திக்க ஒரு மனம் இருந்தது,
செயலாக்க ஒரு உடம்பு இருந்தது,
காலத்தின் களவு என்னவள் கரைந்தாள்.


இருவராக இருந்தோம் இளைப்பாற வந்தனர்.

தனிமரம் ஆனேன்:-
தாகத்தை தீர்க்க யார் வருவர்,
காலம் வரும் எதிர் கொள்ள,
கரையும் வரை நான்......
தேடுகிறேன்!! என்ன வளை எங்கே என் தேவதை ???

எழுதியவர் : செல்வன் ராஜன் (15-Jan-24, 8:33 am)
சேர்த்தது : செல்வன் ராஜன்
Tanglish : ennavalai kaana
பார்வை : 190

மேலே